செவ்வாய், 18 அக்டோபர், 2016

காவேரி நதிக்கு கர்நாடகம் சொந்தம் கொண்டாடுவது !! நியாயம்தானா நீ சொல்லு !!







காவேரி நதியை கர்நாடகம் மட்டுமே சொந்தம்கொண்டாடுவதுநியாயமா?




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய அதிகாலை 
வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

தமிழக அரசாங்கம் சமீபத்தில் விதித்துள்ள 
சர்வாதிகாரம் மட்டுமே நிறைந்த, மக்களின் 
பேச்சுரிமை, எழுத்துரிமை, என்று இந்திய 
அரசியல் அமைப்பு தந்த சட்டத்திற்கு எதிராக,
கொண்டுவந்துள்ள, செல்லுபடியாகாத,
அவசரச்சட்டம் ஒன்றினை பிறப்பித்து,
அதற்கு தமிழக காவல்துறையை, இங்கே 
முறைகேடாக பயன்படுத்தி இதுவரை 
சுமார் 7 பேர் கைது செய்யப்பட்டு, சிறைச் 
சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் 
என்பது யாவரும் அறிந்த ஒன்று. இந்தச் 
சூழலில், நான் கடந்த பத்து நாட்களுக்கும் 
மேலாக, எந்தக் கருத்தையும் இங்கே 
பதிவு செய்யாமல் ஓய்வில் இருந்தேன்.
ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்பு 
உச்சநீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி 
திரு. மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள்,
தனது முக-நூல் பதிவில், அரசுக்கு அவர்
கொடுத்த சாட்டை அடி, என்னை மீண்டும் 
எழுத்துப்பணியில் ஈடுபடுத்திட வைத்தது 
என்று சொன்னால் அது மிகையான சொல் 
அல்ல.

நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் தினசரி 
2௦௦௦ கன அடி ஒரு வினாடிக்கு தமிழகத்திற்கு 
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிட 
வேண்டும் என்று ஆணையிட்டபிறகும்கூட 
தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக 
அரசைக் கண்டிக்கும் வக்கு,வகை.தெம்பு,
திராணியற்ற மத்திய அரசை என்ன செய்யலாம் 
என்று நீங்களே சொல்லுங்கள்.  இயற்கையால் 
படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் 
அனைவருக்கும்  சொந்தம் என்றால் என்ன பொருள் ? 
எல்லா மக்களுக்கும் என்றுதானே அர்த்தம். அதனை விடுத்து என்னிடம் உற்பத்தியாகும் நதி எனக்கு மட்டுமே சொந்தம் என்றால், அணைக்கட்டு நிரம்பிய பிறகு எதற்காக வழிந்தோடும் நீரை ( OVER-FLOW) மட்டும் தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் ?
அதையும் கர்நாடகாவே வைத்துக்கொள்ள 
வேண்டியதுதானே ? அந்தக்கருத்தை ஒரு 
வாதத்திற்கு ஏற்றுக்கொள்கிறோம் என்று 
சொன்னால், இங்கே நெய்வேலியில் உற்பத்தி 
ஆகும் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு மட்டுமே 
சொந்தம் என்று சொன்னால், உனது நிலை 
என்ன ஆகும் ? இருளில் கிடந்தது மடிவதைத் தவிர கர்நாடகாவிற்கு வேறு வழி இல்லை.

எனவே, இறுதியாக நான் என்ன சொல்ல 
வருகிறேன் என்றால், வாழு !! வாழ விடு !!
என்ற முதுமொழிக்கு இணங்க கர்நாடக 
அரசு நடந்து கொண்டால், அதற்கு நல்லது.
இல்லை என்று சொன்னால், அந்த அரசு 
உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைப்படி அங்கே 
குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல் 
படுத்துவதைத்தவிர வேறு வழி இல்லை 
என்பதே என்போன்ற, அரசியல் ஆர்வலர்கள் 
கூறிட முற்படும் கருத்து என்று சொல்லி 
நான் எனது கட்டுரையை நிறைவு செய்கிறேன் 
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை. T.R. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக