ஞாயிறு, 25 டிசம்பர், 2016

இத்தனை நாள் என்ன செய்துகொண்டு இருந்தது மத்திய அரசின் வருமானவரித்துறை ?



இத்தனை  ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தது ?
மத்தியஅரசின்வருமானவரித்துறை?




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

கடந்த ஒருவாரமாக, தமிழகத்தில் மிகவும்
பரபரப்பாக ஊடகங்கள், பத்திரிக்கைகள் இவை
அனைத்திலும் பேசப்பட்டு,எழுதப்பட்டு வரும்
விஷயம் கருப்புப்பண வேட்டை, மற்றும் தமிழக
உயர்மட்ட அரசு அதிகாரிகள் (IAS தகுதி பெற்ற)
தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அத்தனை
நபர்களின் வீடுகள், அவர்களின் உறவினர்கள்
மற்றும் நண்பர்கள், அனைவரின் வீடு,மற்றும்
அலுவலகங்கள் உட்பட எல்லா இடங்களிலும்
இரவு,பகல் என்று பாராமல், தேடுதல் வேட்டை
நடைபெற்ற செய்தி நாடெங்கும் அதிர்வலைகளைஏற்படுத்தி உள்ளது. 

இது ஒரு காலம் தாழ்த்தியநடவடிக்கைதான் என்றாலும் வரவேற்போம்.

அதுசரி, ஐயா பிரதமர் மோடிஜி அவர்களே , இதே தமிழ்நாடு அரசு உயர்அதிகாரிகளின் ஒப்புதலோடுதான் , மணல் கொள்ளை
உள்ளிட்ட, பல்வேறு முறைகேடுகளின் வாயிலாக (இப்போது மறைந்த) அம்மையார் ஜெயலலிதா ஆட்சி புரிந்த கடந்தஐந்து ஆண்டுகளும் இதே நிலைதானே இங்கே
நீடித்துவந்தது. அப்போதெல்லாம் எதிர்கட்சிகள்
கத்தோ கத்துதென்று கத்தியும், நீங்களும் சரி, உங்களது ஆளுகைக்கு உட்பட்ட வருமனவரித்துறையும் சரி, CBI இத்யாதி இத்யாதி அனைத்துத் துறைகளும் அப்போதெல்லாம்எந்தவிதமான சோதனை நடவடிக்கையிலும்ஈடுபடாமல், இப்போது அம்மையார் ஜெ மறைந்தபிறகு உங்க நடவடிக்கைகளை ஆரம்பித்ததன்
உள்நோக்கம் என்ன ? சத்தியமா நான் கேக்கலைங்கோ,கேட்கிறார்கள் ஸ்ரீமான்
பொதுஜனம். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்என்றால், மறைந்த அம்மையார் ஜெ உங்களோடவணிக பங்குதாரர் (அதாவது அவர் அடிக்கும்கொள்ளையில், உங்களுக்கும் சரிவிகித பங்குதரப்பட்டுள்ளது) எனவே அவர்உயிரோடு இருக்கும்வரை, எந்தவிதமானசோதனை நடவடிக்கைகளையும் மோடிஜிநீங்க எடுக்கலையாம். இத்தக்கூட நான் சொல்லலஜிபொதுமக்கள்தான்  பேசிக்கிறாங்க. 

அதுபோல இப்பநீங்க நடவடிக்கை எடுத்ததுக்கும் ஒரு காரணம்இருக்குதாம். என்னன்னு கேட்டீங்கன்னா  திரு மோடிஜி அவர்களே இந்த
பொம்மை OPS தலைமையில் உள்ள ஆட்சியை உங்களுக்குஆமாம் சொல்ல வைக்க நீங்க எடுத்த அதிரடிவைத்தியம்தான் இந்த கைது,சோதனை, பறிமுதல்இத்தியாதி நடவடிக்கைகள் எல்லாமாம். ஒழுங்கா நீங்க
சொல்றத கேட்டு அவங்க (OPS) பொம்மை மந்திரிசபை நடந்தாவெறும் சோதனையோட நிறுத்திக்குவீங்களாம்அப்படி இல்லன்னு சொன்னா, அடுத்தகட்டநடவடிக்கையான, கைது,வழக்கு,தண்டனைஅப்டி இப்டின்னு போவீங்களாம். இத்தக்கூடநான் சொல்லலஜி. பொதுமக்கள் பேசிக்கிறாங்க.

என்ன எழவோ, உங்கட்ட ஆட்சி,அதிகாரம்
இருக்கு நீங்க என்ன வேணும்னா செய்யலாம்.

ஆனா ஒன்னு, நீங்க குன்னக்குடிக்கு அன்னக்காவடிஎடுத்தாலும், இங்க தமிழ்நாட்டுலே உங்க பருப்புஒன்னும் வேகாதுஜி வேகவே வேகாதுஜி. 

இங்கஒரு மாபெரும் சக்தி இருக்கு அதுதான் முத்தமிழ்அறிஞர் தமிழினத்தின் ஒரே ஒரு காவலர் தலைவர்கலைஞர்ஐயா, அவரது அரசியல் வாரிசு தளபதி திரு.. மு.க.ஸ்டாலின், இவங்க எல்லாம் இருக்குற வரைக்கும்
நீங்க பேசாம தேசாந்திரம் ( பரதேசம்- காசி யாத்திரை )போக வேண்டியதுதான்.

என்ன..நான்..சொல்றது..சரியாஜி.
புரிஞ்சுக்குங்க. வரட்டா ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக