ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கு போல ஆகினார் !! நரேந்திரர் !!
ஆப்பசைத்த குரங்கு போல ஆகினார் !!
நரேந்திரர் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.
அந்தக்காலத்தில் வாழ்ந்திருந்த பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றில்இடம்பெற்றபாடலிது :-
நாப்பிளக்க பொய் உரைத்து !!நவ நிதியும் தேடி !!நலன் ஒன்றுமே அறியா !!நாரீயரைக் கூடி பின் !!பூப்பிளக்க வந்துதித்த !!புற்றீசல்போல !!புலுபுலென கலகலவென !!புதல்வர்களைப் பெறுவீர் !!காப்பதற்கும் வகை அறியீர் !!கைவிடவும் மாட்டீர் !!கவர்பிளந்த மரத்தினிடை !! கால் நுழைத்துக்கொண்டே !!
ஆப்பதனை அசைத்து விட்ட !!
குரங்கதனைப் போலவே !!
அகப்பட்டீர் !! அகப்பட்டீர் !!
கிடந்தது உழல !!
அகப்பட்டீர் !!
இந்தப் பாடல், ஒரு திருமணம் முடித்து
வருகின்ற புதுமணத்தம்பதிகளைப்பார்த்து
பட்டினத்தார் ஆசி வழங்குவதுபோல அந்த
இடத்தில், இந்தப்பாடல் வருகின்றது.
பாடலின் பொருள் :-
பேசுகின்ற பொய்யில், நாவே பிளந்து போய்விடுமாம்.
அப்படி பேசினால்தான் மட்டுமே ஒன்பது வகையானசெல்வங்கள் வந்து சேர்ந்திடுமாம். அப்படி செல்வங்கள்சேர்த்திட்ட ஆண்மகன் உடனே என்ன செய்திடுவான்
என்று கேட்டால், தனக்கு மனைவியாக வருகின்றவளால் தனக்கு நல்லது
நிச்சயம் நடக்காது அப்படி நல்லது நடந்திட வேண்டும்என்று அறிந்திடாத எண்ணம் பிறவியிலே உள்ள பெண்களில்
ஒருத்தியை திருமணம் செய்து சீரழிந்து வாழ்விலே நொந்து நூலெனவேபோவானாம்.
அப்படி திருமணம் செய்ததன் விளைவு, மழைக்கு முன்பாகவருகின்ற ஈசல் கூட்டங்கள் போல குழந்தைகளை பெறுவானாம்.
அவைகளைக் காப்பாற்றிடவும் இவனுக்கு வழிவகைகள்தெரியாதாம். ஆனாலும் அதற்காக அந்தப் புள்ளைகளைக் கைவிடவும்மாட்டானாம் கைவிடவும்முடியாதாம். இதற்கு பாடலை எழுதியபுலவர் பெருந்தகையீர் கொடுத்த உதாரணம்தான் இங்கேகுறிப்பிடுதற்கு உரியது. அது என்னவென்று கேட்டால் ,
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
10 அடி, 15 அடி விட்டம் உள்ள அறுபது அடி முதல் எண்பது, தொண்ணூறு அடி வரை உயரம் கொண்ட மரங்களை கேரளா போன்ற மலைதேச மாநிலங்களில் காண முடியும்.
அப்படிப்பட்ட உயரங்கொண்ட மரங்களை காலைமுதல் மாலை வரை தொழிலாளர்கள், நடுவில்ரம்பம் கொண்டு அறுத்து பின்னர் வேலை முடிந்து அயர்ச்சிகாரணமாக நாற்பது அடி நீள, ஐம்பது அடி நீளமுள்ள
மரங்களில் பாதி அறுபட்ட பிறகு, மீண்டும் காலையில் பணிக்கு வந்து அறுத்திடும் வேலையை பார்த்திட இருப்பதால்,அந்த அறுபட வேண்டிய இடத்தினை குறிக்க மரத்தால் செதுக்கப்பட்டகுச்சி ஒன்றினை ( இதன் பெயர் " ஆப்பு "என்று சொல்வார்கள்)பிளந்த இடத்தில் ஓங்கி அடித்து வைத்து விட்டு, தொழிலாளர்கள்கீழே இறங்கி வேலையை முடித்து வீடு செல்வது வழக்கம்.
இந்த அறுவை வேலைகள் நடைபெறுகின்ற இடத்திற்கு அருகில்உள்ள மரத்தில் உயரத்தில், அமர்ந்து இருந்த குரங்கு ஒன்று இந்தஅனைத்து இவர்கள்நடவடிக்கைகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, இரண்டாக, பிளவுபட்ட மரத்திற்கு நடுவில் ஒருகாலையும், வெளிப்புறம் மற்றுமொரு காலையும் வைத்துதொங்க விட்டுகொண்ட பின்பு , இந்தக் குரங்கு என்ன செய்திடுமாம் என்று கேட்டால், ஆப்பு இலேசாக அசைத்திடமுற்படும். அதனது தீவிர முயற்சியின் பயனாக, இலேசாகஅந்த ஆப்பு அசைய ஆரம்பிக்கும். பிறகு ஒரு கால கட்டத்தில்ஓங்கி இழுத்து தனது முழு பலத்தையும் அந்த ஆப்பின் மீதுகாண்பிக்க, ஆப்பு, மரத்தினின்று குரங்கின் கைகளுக்குவந்து விடும். ஆனால், இப்போது அதன் ஒரு கால், மரத்தில்இடையே சிக்கிக்கொண்டு குரங்கு கத்த ஆரம்பிக்கும். இரவுநேரம் முழுதும் கத்தி கத்தி, அலறி,அலறியே குரங்கு உயிர் பிரியுமாம். இது திருமணம்செய்தபுதுமணத்தம்பதிகளுக்குபட்டினத்தார் சொல்லிய கருத்து.
ஆனால், நான் இதே கருத்தை, சற்றே மாற்றியபடி, நரேந்திரர்அவர்கள் குரங்காக செயல் பட்டு, அஇஅதிமுக கட்சியைஇரண்டாக பிளவு படுத்தி அதனை தனது வசம் கொண்டு வந்துபின்வாசல் வழியே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிடஆரம்பம் முதலே பன்னீர் செல்வத்தை மிரட்டிப் பார்த்தார்.பலன்வகிட்ட வில்லை.வளைந்து கொடுத்தார். பிறகு பன்னீரிடம் விஷயம்எதுவுமில்லை என்று அறிந்திட்ட, நரேந்திரர், எடுபிடிபழனிச்சாமியை தனது பிடிக்குள் வைத்து அரசியல் செய்திடமுயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்றுவிடும் என்றசூழலில், இங்கே ஜெயிலில் இருந்த திரு. TTV தினகரன் மூன்று தினங்களுக்கு முன்பாக பெயிலில்வெளியேவர, அவரிடம் அவரதுஆதரவுபெற்றசட்டமன்றMLAக்கள்சந்திப்பு நேற்றுமுதலாக நிகழ்ந்து வருது. இப்போது 30 MLAக்கள் தினகரன் பக்கம்வந்தாகிவிட்டது. மோடியின் கனவிலே ஆண்டவன் ஆப்பு வைத்துவிட்டான். இப்ப என்ன செய்வார் நரேந்திரர் ?
இதுதான் கேள்வி இப்போது.
எது எப்படியோ, தமிழ்நாட்டு அரசியல், ஒரு தெளிந்த நீரோடைபோலத்தான் இதுவரை இருந்தது. இனிமேல் என்ன நடக்கும்
என்பது பார்ப்போம்.
நன்றி. வணக்கம்.
அன்புடன்.
கவிஞர் மதுரை தி.இரா.பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக