தமிழக சட்டமன்றத்தைக்கூட்ட மறுத்திடும் அரசின் செயல்பாடு !! நியாயம்தானா நீ சொல்லு !!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம். இன்றையதினம்
நமது தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டு
இருக்கும் ஒரு பினாமி ஆட்சியில் ஏன் ? என்று
கேட்டால் வசவுகள் நிறைந்த அறிக்கைகள்,
எதற்காக என்று கேட்டால் எகடியம் செய்து
அறிக்கைகள் இவைகள் அனைத்தும் நியாயம்
தானா நீ சொல்லு ?
இராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு அங்கே
இலங்கையில் தூக்குதண்டனை விதித்து
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனைத்
தடுத்து நிறுத்திட சட்டமன்றத்தில் அனைத்துக்
கட்சியின் சார்பாக/ஒருமனதாக ஒரு தீர்மானம்
அங்கே நிறைவேற்றப்பட வேண்டும்.
அதற்காகவாவது சட்டமன்றத்தைக் கூட்டுங்கள்
என்று மாண்புமிகு பினாமி முதல்வர்
திரு O.பன்னீர்செல்வம் அவர்களுக்கு
தளபதி திரு ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள்
விடுக்கிறார். அதனை முதல்வர் ஏகடியம் செய்து
விமர்சனம் செய்கிறார். இது நியாயம்தானா நீ
சொல்லு !!
வரலாறுகாணாத வகையில் ஆவின் பாலின்
விலையை லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய்
உயர்த்தி இந்த அரசு மக்களிடம் கொள்ளை
அடிக்கிறது. அதனைத் தட்டிக்கேட்கவேண்டும்
அதற்காகவாவது சட்டமன்றத்தைக் கூட்டுங்கள்
என்று ஆளும்கட்சியைத்தவிர அனைத்துக்
கட்சியினரும் வேண்டுகோள் விடுத்தால்
அதனையும் நக்கல்,நையாண்டி செய்திடும்
வகையில் ஒரு பினாமி முதல்வர் தலைமையில்
ஒருஅரசுஇங்கேசெயல் பட்டுக்கொண்டிருப்பது
என்பது நியாயம்தானா நீ சொல்லு!!
அதே போல மின்கட்டனத்திலும் மக்கள்சாகின்ற
அளவு உயர்த்திட திட்டமிட்டுள்ள
அரசாங்கத்தைக் கண்டிக்கும் வகையில்
மக்களின் சார்பாக அனைத்துக்கட்சியினரும்
சட்டமன்றத்தில்தங்களதுகருத்துக்களைத்
தெரிவிக்க ஆசைப்படும் அதே வேளையில், அந்த
ஆசையில் மண்ணைப்போடும் விதமாக,
சட்டமன்றத்தைக் கூட்ட மறுத்திடும் வகையில்
செயல்படும் இந்த அரசாங்கம் செயல்படுவதும்
நியாயம்தானா நீ சொல்லு !!
இங்கு நடப்பது எல்லாமே அநியாயம். இங்கே
நியாயத்தை எதிர்ப்பார்ப்பது குருடன் எல்லோரா
குகையில் உள்ள சிற்பங்களின் அழகைக்
கண்டு ரசிக்க ஆசைப்படுவது போலன்றோ
இருக்கிறது ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் திருமலை இரா.பாலு.
( மதுரை TR பாலு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக