ஏன் இப்படி உயிர்பலிகள் வாங்குகிறாய் ?
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் காலை வணக்கம் !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
நேற்றையதினம் தமிழக முதல்வர் தனது
விருத்தாசலம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில்
பேசியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்
இரண்டு பேர் மூச்சு திணறி இறந்தது மட்டும்
அல்ல இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள்
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதறுகு என்ன காரணம் ? அம்மையார் தனது
பரப்புரைக்கு ஹெலிகாப்டர் மூலமாக அங்கே
பிரச்சாரக்கூட்டத்திற்கு செல்வதனால் மட்டுமே
கொளுத்துகின்ற வெயிலில் காசு கொடுத்து
கூட்டி வந்த மக்கள் நிற்க வைக்கப்படுவது
மேலும் அந்த வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் அவர்கள் இறப்பதும் மயங்கி வீழ்வதும் இங்கே நடைபெறுகின்றது.
ஹெலிகாப்டர் பயணம் என்பது இரவில் செய்திட முடியாது என்பதால்,தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை அவரால் மாலை நான்கு மணிக்குள் முடித்துவிட்டு வெளிச்சம் மங்குவதற்குள் சென்னை திரும்ப வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக, அப்பாவி ஏழை
மக்களை இப்படி வெயிலில் நிற்க வைத்து
அவர்களது உயிர்களை பலிவாங்குகின்ற
இரத்தக் காட்டேரியாக செயல்படுகிறார் என்று
மக்கள் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். உன்
ஒருவரின் நலத்திற்காக, இங்கே இப்படி ஏழை
அப்பாவி உயிர்களை பலி வாங்குகிறாயே இது
உனக்கே நியாயமா ?
பதில் சொல் பத்திரகாளியே !!
நன்றி !! வணக்கம் !!
மன வேதனையுடன்.
மதுரை T.R. பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக