வியாழன், 31 மார்ச், 2016

உடனடித்தேவை குடியரசுத்தலைவர் ஆட்சி மட்டும்தான் தமிழகத்திற்கு !! தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும் என்று உண்மையிலேயே தேர்தல் ஆணையம் நினைத்தால் !!





அமல்படுத்து குடியரசுத்தலைவர்                               ஆட்சியை !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அனைவருக்கும் வணக்கம்.

நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் 
தேர்தல், நியாயமாகவும், சுதந்திரமாகவும் 
நடைபெறவேண்டும் என்று உண்மையிலேயே 
இந்தியத் தேர்தல் ஆணையம் நினைத்தால்,
தமிழ்நாட்டில், உடனடியாக குடியரசுத்தலைவர் 
ஆட்சியை இங்கே அமல் செய்து, ஆட்சியில் 
உள்ள நடப்பு அஇஅதிமுக விற்கு ஆதரவாக 
செயல்பட்டுக்கொண்டு இருக்கும் IAS மற்றும் 
IPS அதிகாரவர்கத்தை பொறுப்பில் இருந்து 
கழட்டிவிட்டு, நியாயமான அதிகாரிகளை, 
நேர்மையான அலுவலர்களை, அந்தந்தப் 
பணிகளில் அமர்த்தினால் மட்டுமே இங்கே 
தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் 
சுதந்திரமாகவும் நடைபெறும் என்பதில் என்போன்ற அரசியல் ஆர்வலர்களுக்கு  
எள்ளின் முனையளவுகூட சந்தேகம் இல்லை.
ஆளும் அதிகார வர்கத்தின் தலைமைப்பீட 
பதவியில் உள்ள அம்மையார், தனது சிறுமதி 
கொண்டு ஆங்கங்கே அவருக்கு ஜால்ரா போடும் 
மாவட்ட ஆட்சியாளர்களை, காவல்துறை உயர் 
அலுவலர்களை வைத்துக்கொண்டு, தன்னிடம் 
இருக்கும் இமாலய பணபலத்தால்,எப்படியாவது 
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் 
மீண்டும் அமர்ந்துவிட வேண்டும் என்ற அதிகார,ஆணவ வெறித்தனத்தால், அவர் போடுகின்ற தேர்தல் வியூகங்களை தவிடுபொடி ஆக்க, இந்தியத்தேர்தல் ஆணையம், உண்மையிலேயே முடிவு எடுத்தால், குடியரசுத்தலைவர் ஆட்சியை இங்கே எப்பாடு பட்டாவது அமுல் செய்தே ஆகவேண்டும்.
இல்லையென்று சொன்னால், இங்கே ஜனநாயகம்என்பது கேலிக்கு உரிய மட்டமான பொருளாகவும், தேர்தல் என்பது ஒரு சிறுபிள்ளை விளையாட்டாகவும் மட்டுமே 
இருக்கும் அதில் நீதி, நேர்மை,உண்மை என்பது 
கடுகு அளவுகூட இருக்காது.

ஆதரிப்பீர் மக்களே எனது கருத்தை.

நன்றி. வணக்கம்.

அன்புடன். மதுரை. TR.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக