நீதியே நீயும் இருக்கின்றாயா ? (தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கிலிருந்து குற்றவாளிகள் தண்டனை குறைப்பு பற்றிய கட்டுரை !!)
நீதியே நீயும் இருக்கின்றாயா ?
( தருமபுரி பேருந்து எரித்த வழக்கு பற்றிய கட்டுரை)
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
அது 1964ம் ஆண்டு. கழகத்தலைவர் முத்தமிழ்
அறிஞர் கலைஞர் கதை வசனத்தில் வெளிவந்து
புகழ் பெற்ற காவியம்தான் " பூம்புகார் " எனும்
கருப்பு-வெள்ளைச் சித்திரம்.
அதில் கலைஞர் எழுதிய கருத்தாழமிக்க பாடல்கள் பல இடம்பெற்றது. அவற்றுள் ஒன்றுதான் நான் தலைப்பாக குறிப்பிட்டு உள்ளது :-
நீதியே நீயும் இருக்கின்றாயா ? இல்லை நீயும் அந்தக் கொலைக்களத்தில்உயிர்விட்டாயா?
எனும் பல்லவியுடன் துவங்கும் அந்தப்பாடல். சரி.அதை நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் இன்று ?
என்பதற்கு பதில் தான், நேற்றையதினம் உச்சநீதி
மன்றத்தில் 2௦௦௦ ம் ஆண்டு அம்மையார் கொடைக்கானல் ப்ளசன்ட்ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து ஆளும் கட்சியின் ரௌடிகும்பல்களால் தர்மபுரியில், கோவை விவசாயக்கல்லூரி பேருந்து
அதில் இருந்த 3 மாணவிகளோடு எரித்து நாசம்
செய்த வழக்கில் தூக்குதண்டனை பெற்ற கழக
நிர்வாகிகள் மூவருக்கும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து மேல்முறையீடு
செய்து தமிழக அரசு வழக்கறிஞர் வாய்மூடி மவுனியாக செயல்பட்ட ஒரே காரணத்திற்காக, (குற்றவாளிகளுக்கு வழக்கறிஙகர்களாக ஆஜர் ஆனவர்கள் யார் என்று கேட்டால், அம்மையாரின் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு துணை நிற்கின்ற அதே கூட்டம்தான்) தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு அதுவும் ஆயுள் தண்டனை என்று அறிவிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட போது
எனக்கு கலைஞர் எழுதிய " நீதியே நீயும் இருக்கின்றாயா?"என்ற பாடல்நினைவுக்கு வந்தது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.
தமிழ்நாட்டில், எந்த அளவுக்கு மனிதநேயம், மனித உயிருக்கு உள்ள மதிப்பு, தனது கட்சிக்காரர்களை காப்பாற்ற வேண்டும் எண்ணத்திற்காக உச்சநீதி மன்றத்தில் விலை பேசப்பட்டதை எண்ணுகின்றபோது
உலகநாயகன் திரு.கமல்ஹாசன் அவர்கள் சொன்னது போல, நாம் இனியும் இந்த நாட்டில் வாழ வேண்டுமா ?என்ற சிந்தனையை, பொதுவாக அனைத்து மக்கள் நெஞ்சத்திலும் எழுப்பி இருக்கிறது என்று சொன்னால்
அது மிகையான சொல் அல்ல அன்பர்களே.
அந்த தீயில் கருகி உயிர் நீத்த மூன்று மாணவிகளின் பெற்றோர் மனங்கள் எந்த அளவுக்கு வேதனைத்தீயில் வெந்துகொண்டு இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கின்ற
போது துன்பமும் துயரமும் கண்களில் நமக்கு கண்ணீராக வடிவத்தைத் தடுக்க இயலவில்லை என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.
இப்படி ஒரு இரத்தக் காட்டேரி, மனித உயிர்களை மாய்த்து அதில்மஞ்சம்அமைத்துஉல்லாசபுரியில் உலாவரும் ஒரு அரக்கியை இதுவரை இந்தத் தமிழகம் பார்த்ததும் இல்லை இனிமேல் பார்க்கப்போவதும் இல்லை என்பது உண்மை மறுக்க முடியாத, மறைக்க இயலாத உண்மை
என்பதை நான் இங்கே கண்ணீருடன் பதிவு செய்கிறேன்.
வெந்தணலில்காய்ந்துசருகாகிசாம்பலாகிப் போன அந்த மூன்றுமாணவிகளின்ஆத்மாவிற்கு பலம் உள்ளது உண்மையானால், இந்த இரத்தக்காட்டேரி, மனித உருவில் வலம் வரும் அரக்கி, இந்தத் தேர்தலில் எவ்வளவு பணபலம்
ஆட்சிபலம்,ஆள்பலம் இருந்த போதிலும் அவை அத்தனையும் சுக்குநூறாகஉடைத்தெறிந்து
மண்ணைக்கவ்விடவைத்திடும்.வைத்திடவேண்டும். இது என்தமிழ் மேல் ஆணை. இந்தத் தமிழ்நாட்டின் மேல் ஆணை. என் ஒப்பற்ற தலைவன் கலைஞர் மீது ஆணை.
நன்றி !! வணக்கம் !!
(கண்ணீருடன்) திருமலை.இரா.பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக