பணத்தை மட்டும் நம்பிக்கிட்டு............( மக்கள் நலன் கெடுக்கும் அணி + நடிகர் விஜயகாந்த் கட்சி)
பணத்தை மட்டும் நம்பிக்கிட்டு.......
( மக்கள் நலன் கெடுக்கும் அணி + நடிகர் விஜயகாந்த் கட்சி)
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனியமாலை வணக்கங்கள்.
அது 1961ம் ஆண்டு. புரட்சிநடிகர் என்று தமிழினத்
தலைவர் கலைஞர் அவர்களால் பட்டம் பெற்ற
மறைந்தMGRநடித்துவெளிவந்தகருப்புவெள்ளை
திரைப்படம்தான் " நல்லவன் வாழ்வான் ".
அதில் ஒரு பாடல். என்னவென்றால் :-
அடிச்சிருக்கு !! நல்லதொரு சான்சு !!-இப்ப
கிடைச்சிருக்கு !! நமக்கு அந்த நியூசு !!
என்று துவங்கிடும் அந்தப்பாடலின் முடிவில்
ஒரு தொடர்வரிகள் இடம்பெறும். அதுதான் :-
ஊருக்காக உழைச்சவங்க !!
ஒற்றுமைய வளத்தவங்க !!
தேர்தலிலே போட்டியிட்டா பாஸு !!
பணத்தை மட்டும் நம்பிக்கிட்டு !!
பச்சோந்தியா மாறிக்கிட்டு !!
பதவி வேட்டை ஆடவந்தா பெயிலு !!
பட்டம்,பதவி வேட்டை ஆட வந்தா பெயிலு !!
என்று அந்தப்பாடலில் வரிகள் இடம்பெறும்.
இன்றைக்கு சுமார் 55 ஆண்டுகள் முன்பே அந்தப்
பாடலை இயற்றிய கவிஞர் பெருமகனுக்கு
தமிழ்நாட்டில் இப்படியொரு நிலை ஏற்படும்
என்று கணித்து இப்பாடலை எழுதினாரோ
என்னவோ நான் அறிந்திலேன். ஆனால் அந்த
பாடல் வரிகள்தான் உண்மை.
அரசியல் புரோக்கர் மாமா துரோகி வைகோ
ஜெயாவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கு
வேலையை கச்சிதமாக முடித்துவிட்ட முக
மலர்ச்சியோடு இன்று பத்திரிக்கையாளர்
சந்திப்பின்போது இளிச்சவாயனாக காட்சி
தந்தார் துரோகி வைகோ.
எதுக்கும் நாலு பேர் வேண்டும் என்ற முதுமொழிக்கு இணங்க, நடிகர் விஜயகாந்தை தூக்கிக்கொண்டு போக அவரை கண்ணம்மா பேட்டையில் வைக்க வைகோ,இடது,வலது கமிஷன் கட்சிகள்,மற்றும் திருமா ஆக நான்கு பேர் பாடை தூக்க வந்துவிட்டார்கள். அநேகமாக அடக்கம் மே மாதம் 19ம் தேதி மாலை நடைபெறலாம். பாவம் நடிகர் விஜயகாந்த். அவரது மனைவி பேச்சுகேட்டு இன்று
சேராத இடத்தில் சேர்ந்து படுபாதாள குழியில்
வீழ்ந்து விட்டார்.
அவருக்கு அனுதாபங்கள். அவரோடு அவரை
தூக்கி வந்த நால்வர் அணிக்கும் எனது ஆழ்ந்த
அனுதாபங்கள்.
தமிழக வரலாறு உங்களை இந்த ஐந்து பேரையும் என்றென்றும் மறவாமல் நினைவில் வைத்திருக்கும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மம் வெல்லும்.
நன்றி. வணக்கம்.
அன்புடன். திருமலை.இரா. பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக