ஞாயிறு, 18 ஜனவரி, 2015

தண்டனைபெற்ற ஒரு குற்றவாளியை அவரது வீட்டிற்கே சென்று மத்திய( கேபினட் ) நிதி அமைச்சர் சந்திக்கலாமா ? இது நியாயம்தானா நீ சொல்லு ?







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!



அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் இனிமை நிறைந்த காலை 


வணக்கங்கள்.  நேற்றையதினம் இரவு 


நேரத்தில், தமிழகத்தில் ஒரு அருவருக்கத்தக்க 


அரசியல் சம்பவம் நிகழ்ந்துள்ளது, அரசியல் 


நோக்கர்களை இந்த நிகழ்வு மனதளவில் 


மிக மிக பாதிப்படைந்திடச் செய்துள்ளது என்பது 


உண்மையே.



ஒரு மத்திய மந்திரிசபையில், நிதி இலாகா 


என்பது இதயத்தினைப் போன்றதாகும். இந்த 


ஒரு இலாகாவிற்குத்தான் ஊண்,உறக்கம்,ஓய்வு 


என்பது போன்ற இந்த மூன்று குணங்களும் 


கிடையவே கிடையாது.  அப்பேற்பட்ட அந்த 


இலாகாவின் மத்திய கேபினட் அமைச்சர் 


மாண்புமிகு திரு அருண்ஜேட்லி அவர்கள், 


நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு 


அளிக்கப்பட்டு 21 நாட்கள் காராகிரத்தில் (JAIL)


சிறைவாசம் அனுபவித்துவிட்டு அதன் பின்னர் 


தனது பணபலத்தால், படை பலத்தால், அரசியல் 


பலம்  இவைகளால்,"கொடுக்கவேண்டியதை " 


கொடுத்து தற்போது பிணையில் (ஜாமீன்) உள்ள 


ஒரு கிரிமினல்குற்றவாளியைஅவரதுவீட்டிற்கே 


சென்று ( அதுவும் ஊர் உறங்கும் இரவு நேரத்தில்- 


அதிலும் அவர் ஒரு அந்தநாள் சினிமா 


நடிகையும்கூட) சந்தித்தது நியாயம்தானா 



நீ சொல்லு ? இவர்கள் இருவரும் " தனிமையில் "


ஐந்து நிமிடம், பத்து நிமிடம் அல்ல, நாற்பது 


நிமிடங்கள் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள் 


என்று சொன்னால் இந்த பாரதத் திருநாட்டில், 


அரசியல் எந்த அளவிற்கு அசிங்கப்பட்டுப்போய் 


இருக்கிறது என்பதற்கு இதனைவிடவும் வேறு 


உதாரணம் வேண்டுமோ ?   இந்த அமைச்சரது 


தனிப்பட்ட தலையீட்டில்தான் இந்த நடிகையின் 


மீது ஏறத்தாள 20 ஆண்டுகளுக்கும் மேலாக 


நடைபெற்றுக்கொண்டிருந்த வருமானவரி 


தாக்கல் செய்யாத குற்ற வழக்கு அதன் 


இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்த 


நிலைதனில், இரு தரப்பினரும் ( நடிகையும், 


வருமானவரித்துறையும் ) சமரசம் செய்து


கொண்டுவழக்குஇன்று திரும்பப்பெற்றுக்


கொள்ளப்பட்டது என்று வந்த செய்தி 


இந்த " சந்திப்பின் மூலம் "  இன்றைக்கு 


உறுதியாகிறது.



சந்திப்பிற்குப்பின் பத்திரிக்கையாளர்களைச் 


சந்தித்த மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு 


திரு அருண்ஜேட்லி அவர்கள் இது ஒரு 


மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தனது 


திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். நான் 


கேட்கிறேன் ஒரு வெளிச்சம்.


நீதிமன்றத்தால் குற்றவாளி என்று 


தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரும், முன்னாள் 


திரைப்பட நடிகையுமான இவர் எந்த 


மரியாதைக்கு உரியவரோ ? அந்த 


ஆண்டவனுக்கே   வெளிச்சம்.


நீதி, நியாயம், நேர்மை, உண்மை, சத்தியம் 


இவைகளே எங்களது அரசாங்கத்தின் ஐந்து 


அடிப்படைக் கொள்கைகள் என்று கூறிஆட்சிக்கு 


வந்த பாரதீய ஜனதா கட்சி இப்போது 


எங்கே போய் ஓடி ஒளிந்து கொண்டதோ ? 


அதுவும் தெரியவில்லை.



பொது மக்களே !!


நீங்களே சொல்லுங்கள் !!

நேற்று நடந்த இந்த சந்திப்பு !!


நியாயம்தானா நீ சொல்லு ?



நன்றி !!  வணக்கம் !!



அன்புடன். திருமலை. இரா. பாலு.



( மதுரை T.R. பாலு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக