புதன், 18 பிப்ரவரி, 2015

நியாயம்தானா நீ சொல்லு !!--ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நடைபெற்ற விதம் சரிதானா ?







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !! 




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் என் இனிய 


காலை வணக்கங்கள். நடந்து முடிந்த


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நியாயமாக 


நடைபெற்றதா ? என்று கேட்டால் என்னைப் 


பொறுத்தவரை இல்லை என்று சொல்வதைத் 


தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை.


அம்மையார் வாங்கிய ஓட்டுக்களை விட 


கிட்டத்தட்ட அதில் பாதி பங்கு வாக்குகள் 


அதிகம் பெற்றதில் இருந்தே நம் அனைவருக்கும் 


தெரியவருவது என்னவென்றால், இங்கேதான் 


அதிகார பலம், பணபலம்,காவல்துறை என்று 


அழைக்கப்படும் ஏவல்துறை மற்றும் பெயர் 


அளவிற்குக் கூட செயல் படாமல் இருந்த 


முடங்கிப்போன தேர்தல் ஆணையம், ஆகிய 


இத்தனை துறைகளின் ஆதரவு இல்லை என்று 


சொன்னால், ஊர் பேர் தெரியாத நடப்பு கட்சி 


வேட்பாளர், உலகமே அறிந்த அம்மையாரை 


விடவும் அதிகமாக 1.1/2 பங்கு எப்படி அதிகம் 


பெற்றிருக்க இயலும் ?.  தி.மு.க. வைப் 


பொறுத்த வகையில், அதன் வாக்கு வங்கி 


அப்படியே அந்தக் கட்சியின் பக்கம்தான்


இருக்கிறது.



இந்த இடத்தில், அம்மையாரின் ஜாதகத்தைப் 


பொறுத்தவரையில் ஒரு மிக முக்கியமான 


கருத்தை இங்கே பதிவு செய்யக் கடமைப் 


பட்டிருக்கிறேன். எப்போதெல்லாம் அவர்கள் 


ஒரு சாதனைக்குரிய வெற்றியைப் 


பெறுகிறார்களோ, அப்போதெல்லாம் மோசமான


ஒரு மரண அடியை மட்டுமே அவர்கள் இதுவரை 


சந்தித்து இருக்கிறார்கள் என்பது வரலாறு.


எப்படி எனில், பாராளுமன்றத் தேர்தலில் 39 


இடங்களில் 37 இடங்களை வென்று இமாலய 


சாதனையைப் பெற்றார்கள். ஆனால் அதன்பின்பு 


நடந்தது என்ன ? 


நாடே அறியும் அந்த அசிங்கத்தை.


அது போலவே இப்போது இடைத்தேர்தல் 


வெற்றி அவர்களுக்கு கீட்டி இருக்கிறது. இதன் 


பிறகு அந்த அம்மையார் பெறப்போகும் மரண 


அடி என்னவாக இருக்கும் ? சிந்தியுங்கள். 


அதற்கான விடை எல்லாம் வல்ல இறைவன் 


ஒருவனே அறிவான்.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை.இரா.பாலு.


மதுரை TR. பாலு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக