பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம். இன்றையதினம்
சன் TV தொலைக்காட்சியில் தினசரி இரவு 8.00
மணி முதல் 8.30 வரை ஒளிபரப்பாகும்
" தெய்வமகள் " நெடுந்தொடரில் வரும் காட்சி
ஒன்றில் ஜோதிடத்தை பற்றியும் ஜோதிடர்கள்
பற்றியும் ஒரு மாபெரும் தவறான கருத்தை,
தொடர் பார்த்து மகிழும் இரசிகர்கள் மனதில்
பதிய வைத்திருக்கும் தொடர் இயக்குனர்
திரு குமரன் அவர்களையும் அவரது
சிந்தனையையும் அகில இந்திய ஜோதிடர்கள்
சங்க உறுப்பினர் என்ற முறையில் வன்மையாக
கண்டிக்கிறேன். நெல் விளைந்திடும் களத்தில்
சில பதர்கள்,புல்கள்களைகள்முளைத்திடத்தான்
செய்கிறது. நான் இல்லை
என்றுசொல்லவில்லை. அதற்காக அந்த
நெல் களஞ்சியங்கள் அனைத்தையும் தீ இட்டு
கொளுத்த முடியுமா ? அது போல ஜோதிடர்கள்
இனத்தில் சில புல்லுருவிகள் /
குடியைக்கெடுக்கும் கோடாரிக்காம்புகள்
இருக்கத்தான் செய்கின்றனர். நான்
இல்லை என்று சொல்ல வில்லை. ஆனால்
அதற்காக ஒட்டு மொத்த ஜோதிடர்கள்
இனத்தையே பரிகாரம் என்ற பெயரில் ஜோதிடம்
பார்ப்பவர்களது மனதில் தவறான கருத்தை
காட்டி கெடுத்திட முற்படலாமா ? இது
தகுமா ? முறையா ? தர்மம்தானா ? நான்
கேட்கிறேன்.
எனவே திரு குமரன் அவர்கள் இதுபோன்று
ஜோதிடர்கள் சமுதாயத்தினை
அவமானப்படுத்திடும் கதாபாத்திரங்களைக்
காட்டுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள
வேண்டும் என்று வேண்டி விரும்பி
கேட்டுக்கொள்கிறேன்.
நான் மிகவும் மதிக்கும் தொலைக்காட்சி
நெடுந்தொடர் இயக்குனர்களில் திரு குமரன்
அவர்களும் ஒருவர். அது ஏன்.
நானே அவரது பல்வேறு தொடர்களில் சிறு சிறு
கதாபாத்திரம் ஏற்று நடித்தவந்தான். இல்லை
என்று சொல்ல வில்லை. ஆனால் அதற்காக,
ஒரு ஜோதிடன் என்ற முறையில், அவர் காட்டிய
இதுபோன்ற காட்சிகளை என்னைப்போன்ற
ஜோதிடர்களால்ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனது வேண்டுகோளினை அவர் ஏற்று
செயல்படுவார் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை. இரா. பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக