பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம். இன்றையதினம்
ஒரு வித்தியாசமான தலைப்பு ஒன்றினைத்
தேர்ந்தெடுத்து அதனை கட்டுரை வடிவில்
உங்கள் அனைவருக்கும் வழங்குவதில் நான்
உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.
நம் நாட்டினை மிகவும் அதிகமாக கொள்ளை
அடித்தவர்கள் யார் ?
ஆங்கிலேயர்களா ? அல்லது
நமது அரசியல் வாதிகளா ?
இதுதான் கட்டுரையின் மூலக்கருத்து.
இப்போது நாம் கட்டுரைக்கு உள் செல்வோமா ?
ஏறத்தாள இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக
நமது இந்தியத் திருநாட்டினை அடிமை நாடாக
மாற்றி, ஆட்சிக் கட்டிலில் கோலோச்சி
வந்தவர்களே கிழக்கு இந்தியக்கம்பெனி என்ற
பெயரில் நாடு முழுவதும் ஆங்கிலேயர்கள்
ஆண்டு கொண்டிருந்த காலங்கள் அது.
எல்லாமே மிகச்சரியாக நடந்து
கொண்டிருந்தது. தவறுக்கோ அல்லது
தப்புக்களுக்கோ துளியும் இடம்தராமல் தராசின்
முள்முனைபோல நின்று நடுநிலை தவறாமல்
கிஞ்சித்தும் மாறுபடாது ஆங்கிலேயர்கள் நமது
பாரதத் திருநாட்டை ஆண்டுகொண்டிருந்தனர்.
உள்நாட்டில் வரி வசூலித்தார்கள். இல்லை
என்று சொல்லவில்லை. ஆனால் வசூலித்த
பணம் முழுதும் இந்த நாட்டின்
முன்னேற்றத்திற்கும், நாட்டின்
அடிப்படைத் தேவைகளுக்கும் மட்டுமே
அவர்கள் செலவு செய்தார்களே ஒழிய, ஒரு
பைசாகூட அவர்கள் ஊழல் செய்யவில்லை.
நம் நாட்டில் இருக்கும் அனைத்து நீர்
நிலைகளான அணைக்கட்டுக்கள்
சுமார் எண்பது விழுக்காடுகள் வரை
ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டியதுதான்.
அதேபோல சாலை வசதிகள், மின்சார
உற்பத்தி நிலையங்கள், ரயில் தண்டவாளங்கள்
காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை அவர்கள்
காலத்தே உருவாக்கப்பட்டதுதான். அதேபோல,
கோடை வாசஸ்தலங்களான ஊட்டி, நீலகிரி,
மலைகளின் இளவரசியான கொடைக்கானல்
இவைகளும் ஆங்கிலேயர்கள்தான்
இந்த நாட்டிற்கு உருவாக்கி அர்பணித்தார்கள்.
அப்படிப்பட்ட ஆங்கிலேயர்களை சுதந்திர
போராட்டத்தின் வாயிலாக அகிம்சை வழியில்,
விரட்டி பின் எங்கள் நாட்டை உருவாக்க நீ யார் ?
அதை ஊழல் என்னும் நெருப்பு மூலமாக
கொள்ளையடிக்க நாங்கள்தானே இந்த
மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லி
சுதந்திரம் பெற்றோம் அதுவும் நள்ளிரவில்.
அதனால்தானோ என்னவோ இன்றுவரை
விடியவே இல்லை. சுதந்திரம் அடைந்தாகி
விட்டது. தேர்தல் வந்தது. நமது
அரசியல்வாதிகள்தங்களது வேலைகளை
துவக்கிவிட்டார்கள். இன்று பதவி
வேட்டைமூலமாக நாடு முழுவதும் இலஞ்ச
லாவண்யங்கள் மூலமாக பல
அரசியல்வாதிகள் மாபெரும்
கோடீஸ்வரர்கள் ஆனார்கள். அதிலும் குறிப்பாக
சொல்லவேண்டும் எனில், நமது தமிழ்நாட்டைப்
பொறுத்தவரையில், 1967 ம் ஆண்டு மூதறிஞர்
இராஜாஜி அமைத்திட்ட மாபெரும் அரசியல்
கூட்டணி புரட்சியால் ஆட்சியில் அமர்ந்தது
திராவிட முன்னேற்றக் கழகம். பேரறிஞர்
அண்ணா தலைமையில் அன்று
ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இரண்டு
ஆண்டுகள் மட்டிலுமே உயிர்வாழ்ந்த அறிஞர்
மறைந்தார். அன்று முதல் நாற்காலி சண்டை
ஆரம்பம் ஆனது. கலைஞர் மற்றும் நாவலர்
இருவரில் யார் முதல்வராக அங்கே
அமர்வது என்பதில்தான் போட்டி. மறைந்த
புரட்சி நடிகர் M.G.R. கலைஞர் பக்கம் நிற்க,
வென்றார் கலைஞர்ஆனார் முதல்வராக. அது
முதல் இங்கே விஷ வித்துக்கள் தூவப்பட்டது.
அது இன்று திராவிட முன்னேற்றக்கழகத்தில்
இருந்த பிரிந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்
அமர்ந்தபோது ஆலமரமாக ஆகி விழுதுகளை
வளரச்செய்தது. ஆம் இன்றோ
எங்கும் ஊழல்.எதிலும் ஊழல். மின்சாரம்
வாங்குவதில் ஊழல், கிரானைட் ஊழல்,
பருப்பு வகைகள் வாங்குவதில், தமிழக கைத்தறி
நெசவு செய்பவர்களின் வயிற்றில் அடித்துவிட்டு
வெளி மாநில நெசவாளர்களிடம் துணிமணிகள்
வாங்குவதில் இமாலய ஊழல் ( இலவச
வேட்டி,சேலை திட்டம்) ஆவின் பால்
கலப்படம் செய்ததில் இலட்சக்கணக்கில் ஊழல்
என்று பல கோடி பணம் தோட்டத்திற்கு
சென்றுவிட்டது.
தூத்துக்குடியில் தாது மணல் கொள்ளையில்
பல லட்சம் கோடி ரூபாய்கள் போயசின்
பெட்டிகளை நிரப்பி விட்டது. வி வி மினரல்ஸ்
இதன் ஊற்றுக்கண். இவர் ஜெயா தொலைகாட்சி
நிறுவன பங்குதாரர்களில் ஒருவர். இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் அதற்கு முன்பாக எனது ஆயுள்
முடிந்துவிடும்.
ஆக இவைகளை எல்லாம் எடை போட்டுப்
பார்க்கும் போது நம் நாட்டினை மிகவும்
அதிகமாக கொள்ளை அடித்தவர்கள் யார் என்று
கேட்டால் அது ஆங்கிலேயர்களை விடவும் மிக
அதிகமாக கொள்ளை அடித்து உலையில்
போட்டது நமது நாட்டு அரசியல்வாதிகளேஎன்று
சொல்லி, வணக்கம் கூறி உங்கள் அனைவரிடம்
இருந்து விடை பெறுவது உங்களது அன்பு
உடன்பிறப்பு திருமலை.இரா. பாலு.
நன்றி.வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக