பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
எல்லாப் புகழும் இறைவனுக்கே !!
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!
அந்த வல்லோனின் புகழைப்பாடிடுவோம் !!
என்றும் ஒற்றுமையாகவே கூடிடும் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் வணக்கம் !!
" நியாயம்தானா நீ சொல்லு "
எனும் வலைதளத்தில் இன்றையதினம் நமது
நாட்டில் நடைபெற்ற சமீபத்திய அரசியல்
சம்பவம் ஒன்றினைப் பற்றி விரிவாகவும் மிக
விளக்கமாகவும் உங்களிடம் சொல்லுவதில்
நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அது என்னவென்றால், விபரம் இதோ :-
சென்ற ஆண்டு அம்மையார் அவர்களது பதவி
பெங்களூரு சிறப்பு தனி நீதிமன்ற தீர்ப்பினால்
செப்டம்பர் 2014ம் ஆண்டு 27ம் தேதி பறிக்கப்பட்ட
பின்பு அவரதுஸ்ரீரங்கம்தொகுதியைகாலியானது
என்று அறிவிக்க சட்டமன்ற சபாநாயகரும் சரி
தேர்தல் ஆணையமும் சரி, எடுத்துக்கொண்ட
காலஅவகாசம் எவ்வளவு தெரியுமா நேயர்களே?
ஏறத்தாள நான்கு மாதங்களுக்கு மேலாகஆனது.
ஆனால் தற்போது என்ன நடந்துள்ளது ? இந்த
ஆண்டு மே மாதம் 17 ம் தேதி சென்னை R.K. நகர்
சட்டமன்ற உறுப்பினரான திருவெற்றிவேல்
தனது M.L.A.பதவியை ராஜினாமா செய்கிறார்.
அது எந்தக்கிழமை என்று தெரியுமா ?
" ஞாயிற்றுக்கிழமை ".
அன்றே இதை சபாநாயகர் ஏற்றுக்கொள்கிறார்.
அன்றையதினமே இது நமது மதிப்புமிக்க
ஞாயமான உண்மையான சத்தியமான
தேர்தல் ஆணையத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்
படுகிறது.
அன்றையதினமே அரசிதழிலும் இந்தராஜினாமா
மற்றும் தேர்தல் ஆணையத்தினால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமும்
வெளியிடப்படுகிறது. எப்படி இருக்கிறது
நியாயம் ? இதற்கு என்ன காரணம் ?
அரசிக்கு ஒரு நீதி. ஆண்டிக்கு ஒரு நீதி.
அன்று குற்றம் சாற்றப்பட்டவர் அம்மையார்
அவர்கள்.
ஆனால் இன்றோ அவர் நீதிதனை வென்று
நிரபராதி என்று பெங்களூரு உயர்நீதி
மன்றத்தினால் குற்றம் அற்றவர் என்று
விடுதலை செய்யப்பட்டவர்.
நாணல் போல வளைவதுதான் சட்டாமாகுமா ?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம்
வேணுமா ?
என்று இந்த அம்மாவின் தலைவர் நடித்த
" ரிக்ஷாக்காரன் "எனும் திரைப்படத்தில்
மறைந்த காவியக் கவிஞர் வாலி ஒரு பாடலை
இயற்றிக் கொடுத்திருப்பார்.
அதுதான் இன்று எனது நினைவின்பால்
வருகிறது. அதே பாடலில் இன்னும் ஒரு
வரிவரும். அது
இப்போது முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்
அவர்கட்கு மிகபொருத்தமாக அமைந்திருக்கும்.
நானொரு கை பார்க்கிறேன் !!
நேரம் வரும் கேட்கிறேன் !!
பூனை அல்ல புலிதான் என்று !!
போகப்போக காட்டுகிறேன் !!
போகப்போக காட்டுகிறேன் !!
எனக்கு மனசு கேட்கவில்லை. அதனால்தான்
இந்த விஷயத்தை என்னுடைய அன்பு நிறைந்த
நேயர்களாகிய உங்களிடம் பகிர்ந்துகொள்வதில்
நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
( மதுரை T.R. பாலு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக