இது நியாயம்தானா நீ சொல்லு ?......அரசியல் சம்பந்தப்பட்டது....
பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு-அலேக்கும் !!
எல்லாப் புகழும் இறைவனுக்கே !!
அல்லாஹ் ஒருவரே துணை நமக்கு !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
உங்கள் அனைவருக்கும் சாந்தியும்சமாதானமும்
வழங்கஎல்லாம்வல்லஇறைவன்அல்லாவிடம்
நான் உங்களுக்காக துஆ செய்கிறேன். நிற்க.
நேற்றையதினம் சொத்துகுவிப்பு வழக்கில்
பெங்களூரு உயர் நீதி மன்றத்தில் " கொடுக்க
வேண்டியதை " கொடுத்து திருட்டுத் தனமாக
வழக்கிநின்று வெளியில் வந்த அம்மையார்
தனது இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்
தான் எதோ சத்தியத் தாய் பெற்றெடுத்த ஒரே
புதல்வி என்றும், தனக்கு நேர்மையையும்
உண்மையையும் தவிர வேறு எதுவும் தெரியாது
என்றும், சதியின் காரணமாக தான் வழக்கில்
தண்டிக்கப்பட்டதாகவும் தற்போது நீதி தேவதை
கண் திறந்ததால் விடுவிக்கப்பட்டதாகவும்,
ஏதோ சாத்தான் வேதம் ஓதுவதுபோலபிரச்சாரம்
செய்துள்ளார்.
இதுதவிர இந்தக் கூட்டத்திற்கு பெண்கள் அதிக
அளவில் அங்கே கலந்து கொள்வதற்கு
வசதியாக RK நகர் சட்டமன்றத் தொகுதியில்
உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார்
பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திற்கும் மதியம் 1
மணிக்கு மேல் கட்டாயமாக, அரசின் பள்ளிக்
கல்வித்துறையின்மறைமுகதூண்டுதலால்,
அவசரம் அவசரமாக விடுமுறை அளிக்கப்பட்டது
நியாயம்தானா நீ சொல்லு ?
இந்தத் தேர்தல் சதியின் காரணமாக
நடைபெறுவதாக அம்மையார் உளறுவதும்
நியாயம்தானா நீ சொல்லு ?
வாக்காளப்பெருமக்களே !!
சிந்திப்பீர் !! செயல்படுவீர் !!
உண்மையில் நல்லவர்கள் இருவர் அங்கே
போட்டியில் இருக்கிறார்கள். மறக்காமல்
அவர்களுக்கே உங்களது விலைமதிப்பற்ற
பொன்னான வாக்குகளை வழங்கி,
எதேச்சதிகாரம் பிடித்த, ஜாதி வெறி கொண்டு
அலையும், பொய் சொல்லித்திரியும்
குற்றவாளி அம்மையாரைத் தோற்கடியுங்கள்
என்றும், அந்த ஆளும் கட்சியினர் ஓட்டுக்கு
பணம் கொடுத்தால் அதையும்வாங்கிக்கொண்டு
அந்த நல்லவர்கள் இருவரில் ஒருவருக்கு
உங்கள் வாக்குகளை வழங்கி அம்மையாரைத்
தோற்கடித்து ஜனநாயகத்திற்கு உங்களது
கடமைதனை செவ்வனே ஆற்றிட உங்களை
வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு நான்
இந்த அளவில் விடை பெறுகின்றேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்பன். திருமலை. இரா. பாலு.
(மதுரை. TR. பாலு.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக