பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!
உலகம் முழுவதும் வாழ்ந்துவருகின்ற
என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய
தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம் !!
சமீபத்தில் சென்னை வந்திருந்த பாரதப் பிரதமர்,
இந்தியாவிலிருந்து ஊழல் என்னும் பிசாசை
முற்றிலுமாக ஒழித்தே தீருவேன் என்று
கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காகவே
அரசாட்சி நடத்துவதாக சொல்லிக்கொண்டு
உலகம் சுற்றிக்கொண்டிருப்பவரும்
ஆகிய மாண்புமிகு (?) நரேந்திர மோடி அவர்கள்
இங்கே சென்னை மாநகருக்கு சமீபத்தில்
விஜயம் செய்திருந்தபோது, முதலமைச்சரை
அவரது இல்லத்திற்கே ( மரபுகளை மீறிய
செயல்-அரசியல் ஆர்வலர்களின்
குற்றச்சாட்டு) சென்று சந்தித்து அவருடன் சுமார்
ஒருமணிநேரத்திற்கும் மேலாக (" இருவர்
மட்டுமே " தனிமையில் தனியறையில்..)
உரையாடியது மட்டுமல்ல அன்பர்களே!! பிரதமர்
திருமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு தனது
" திருக்கரத்தால் " வகைவகையான
தமிழ்நாடு மற்றும் குஜராத்தி உணவுவகைகளை
பரிமாறியாதும் அதனை திரு நரேந்திர மோடி
அவர்கள் சுவைத்து உண்டதும்
நியாயம்தானா நீ சொல்லு ?
சிந்திப்பீர் !! செயல்படுவீர் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன்.திருமலை பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக