திங்கள், 21 செப்டம்பர், 2015

தலித் சமுதாயத்தினைச் சேர்ந்த உயர்நிலை பெண் காவல்துறை அதிகாரியின் மரணத்திற்கு பொறுப்பு யார் ? அவர்களைத் தேடிக் கண்டு பிடித்து தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசாங்கம் அவர்களைக் காப்பாற்ற முயல்வது ஏன் ? இது நியாயம்தானா சொல்லு ?








பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அனைத்து தமிழர்களுக்கும் இதயம் கனிந்த 

காலை வணக்கங்கள்.


திருச்செங்கோடு வட்ட துணை காவல்துறை 

கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த தலித் 

இன பெண் அலுவலர்தான் விஷ்ணு ப்ரியா.

தலித் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கோகுல்ராஜ் 

கொலை வழக்கையும் இவரே விசாரித்துவந்த 

நிலையில், திடீரென்று கடந்த வெள்ளிக்கிழமை

மாலை, தன தங்கியிருந்த அறையில்தான் தூக்கு

மாட்டிக்கொண்டு தற்கொலை 

செய்துகொண்டதாக பத்திரிகை செய்தி.

ஆனால், விஷ்ணு ப்ரியாவின் உறவினர்கள் 

சொல்வது என்னவென்றால், அவர் தங்கியிருந்த 

அறையில் தூக்கு மாட்டிக்கொள்ள எந்த 

வசதியும் இல்லை எனவும் எனவே அவர் 

கொலை செய்யப்பட்டுத்தான் இருக்க வேண்டும் 

என உறுதியாக சொல்லுகின்றனர்.


ஒரு பெண் (?) முதல்வராக பணி செய்திடும் 

மாநிலத்தில் ஒரு பெண் காவல்துறை அதிகாரி 

சுதந்திரமாக வேலை செய்திட வகை இல்லை 

இங்கே. 


என்ன நிலைமை இது.


வெட்கப்படவேன்டாமா முதல்வர். உடனே நடந்த 

நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று தமது பதவியை 

ராஜினாமா செய்துவிட்டு மத்திய புலன் 

விசாரணைக்கு ( C.B.I) வழிவகுத்து உண்மைக் 

குற்றவாளியை கண்டுபிடிக்க வழிவகுத்து 

இருப்பார் என்றால் அனைத்துதரப்பு மக்களாலும் 

பாராட்டப்பட்டு இருந்திருப்பார். ஆனால் அவரது 

துரதிருஷ்டம் 

கேட்பார் பேச்சு கேட்டு, மாவட்ட காவல்துறை 

கண்காணிப்பாளரை காப்பாற்ற 

முனைந்திருப்பது அவர் தலையில் அவரே தீயை 

கொளுத்திக்கொண்டதர்கு சமம்.


நீதிதேவன் தனது உண்மை தீர்ப்பினை எவ்வாறு, 

எப்போது தருவான். காலம் பதில் சொல்லும். 

அதுவரை அமைதி காப்போம்.


நன்றி. வணக்கம்.


அன்புடன். திருமலை. இரா. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக