பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
வணக்கம். தென்னிந்திய நாடக நடிகர்
சங்கத்தில் நடைபெற்றுள்ளதாகச்
சொல்லப்படும் முறைகேடான
ஒப்பந்த பத்திரத்தில், சென்னை நகரில் உள்ள
ஒரு பிரபல திரைஅரங்கு உரிமையாளரான
திருவாளர்கள் சத்யம் திரை அரங்கு
நிறுவனத்திற்கு, நடிகர் சங்கத்திற்கு
சொந்தமான இடத்தினை 29 ஆண்டுகள் 11 மாத
காலத்திற்கு ஒட்டு மொத்த குத்தகைக்கு
விட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக,
எழுந்துள்ள குற்றச் சாட்டிற்கு, அந்த
சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருப்பவரும்
நடப்பு சட்டமன்றத்தின் அம்மா ஆதரவு
சட்டமன்ற உறுப்பினரும்,சமத்துவ மக்கள்
கட்சியின் நிறுவனர் தலைவருமான
திரு சரத்குமார் மற்றும் பொதுச்செயலாளர்
( மறைந்த நடிகவேள் M.R. இராதா அவர்கள்
புண்ணிய குமாரன்)திரு இராதாரவி அவர்கள்
இருவரும் பதில் சொல்லிடக் கடமைப்
பட்டவர்கள்தானே. இதைக் கேள்விகேட்ட
உறுப்பினர். நாடக கலைஞர் திருய் பூச்சி
முருகன் மீது துவேஷம், பகை கொண்டு ஏன்
இப்படி பேட்டிகள் கொடுத்துக்கொண்டு
அலைகிறார்கள் என்ற காரணம்தான் எனக்குத்
தெரியவில்லை. உங்கள் மடியில் கனம்
இல்லை என்றல், வழியில் உங்களுக்கு பயம்
எதற்கு ?
சங்கத்தின் சொத்துக்களை பந்தக பராதீனம்
செய்திட வேண்டும் என்றால், குறைந்தபட்சம்
9 செயற்குழு உறுப்பினர்களாவது கையெழுத்து
இட்டிருக்க வேண்டும் என்னும் நிலையில், ஏன்,
எதற்காக, வெறும் இருவர் மட்டும் அந்தகுத்தகை
ஒப்பந்தத்தில், யாருக்கும், எவருக்கும்
தெரியாமல், இராவோடு இரவாக, மிகவும்
இரகசியமாக நடந்துள்ளது ? என்பதுதான்
இப்போது நம் முன் உள்ள கேள்வி.
சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் !!
பலரை பலகாலம் ஏமாற்றலாம் !!
ஆனால், எல்லோரையும் எப்போதும்
ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது !!
என்று தமிழில் ஒரு சொற்றொடர் உண்டு.
அதுதான் இப்போது எனது நினைவின்பால்
எழுகிறது.
அந்தக்காலத்தில் புரட்சிநடிகர் என்று கலைஞர்
கருணாநிதி அவர்களால் பட்டம் பெற்ற மறைந்த
நடிகர், தமிழ்நாட்டின் முதல்வர். MGR நடித்து
வெளிவந்த " சிரித்து வாழ வேண்டும் " என்ற
வண்ணக்காவியத்தில் கவிஞர் வாலி பாடல்
ஒன்றினை புனைந்து இருப்பார். அதில் ஒரு
வரி வரும்:-
கண்ணை மறைத்து என்ன விதை போட்டாலும்
போட்ட விதை என்னவென்று மரம் வளர்ந்து
காட்டதோ !!
கண்ணைமறைத்தென்னகாரியத்தைச்
செய்தாலும்
காலக்கணக்களவன்காட்டிவைக்கமாட்டானோ !!
இந்தப்பாடல் போல தர்மத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் !! தர்மம் ஒரு நாள் வெல்லும் !!
வாய்மையே வெல்லும் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக