செவ்வாய், 10 நவம்பர், 2015

தன்னைத்தேர்ந்தேடுத்த மக்கள் துயரப்ப்படும்போது சட்டமன்ற உறுப்பினர் அவர்களைப் பார்வையிடச் செல்லாமல் வீட்டினில் ஓய்வெடுப்பது !! நியாயம்தானா நீ சொல்லு ?






பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் 

என் இனிய அன்பு கலந்த காலை வணக்கம்.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக தமிழகம் 

முழுவதும் கொட்டித்தீர்த்த வடகிழக்குப் 

பருவமழை காரணமாக, இன்றையதினம் 

தமிழ்நாடே மழை நீரால் சூழப்பட்டு, மக்கள் 

ஆங்காங்கே கழிவு நீரும் கலந்த தண்ணீர் 

அவரவர்களது இல்லத்தினுள் புகுந்து 

அதன்காரணமாக தீபாவளியே கொண்டாடிட 

முடியாமல், மின்சாரம் இல்லாமல்,நல்ல குடிநீர் 

இல்லாமல், டெங்கு மற்றும் வைரஸ் 

காய்ச்சலால் அவதிப்பட்டு அல்லல் 

பட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்து விழுந்து 

கொண்டிருக்கும் இந்த வேளையில், தனது 

இல்லத்தில், ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்,

ஆளும்கட்சியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற 

உறுப்பினர்களும், இந்த நாட்டிற்கு தேவைதானா 

என்பதனை நாட்டு மக்கள் அவரவர் மனதில் 

குறித்து வைத்துக்கொண்டு எதிர் வரும் 2016 

ஆண்டில்நடைபெறஇருக்கின்ற சட்டமன்றத்

தேர்தலில், யாருக்கு வாக்களித்தால் 

மேலே குறிப்பிட்டுள்ளதுபோன்ற இடர்படும் 

சூழ்நிலையில், நம்மை நேரில் வந்து பார்த்து 

ஆறுதல் சொல்லி, நமக்குத் தேறுதல் 

சொல்வார்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 

தேவையான அனைத்தையும் வழங்கிடுவார்கள் 

என்பதை சிந்தித்து உங்களது பொன்னான 

வாக்குகளை அவர்க்களுக்கு வழங்கி, ஒரு 

பொற்கால ஆட்சி இந்த தமிழகத்தில் வந்திட, 

நம் ஒவ்வொருவரது வாழ்விலும், 

உதயசூரியனின் ஒளியென மின்னிட, 

வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள்தான் 

முக்கியமாக முடிவு செய்து அந்த சின்னத்தில் 

வாக்களிக்க வேண்டுமாய்கேட்டுக்கொண்டு 

நன்றி பாராட்டி விடைபெறுகின்றேன்.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக