திங்கள், 16 நவம்பர், 2015

நீங்க மட்டும் செய்யலாம் !! நாங்க செஞ்சா தப்பா ? மழையின் கேள்வி இது !!






பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.

எல்லோருமே இயற்கையின் சீற்றத்தாலே 

பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் நான் 

உங்களிடம் வந்து இந்தக் கட்டுரையின் 

வாயிலாக, சில கருத்துக்களைப் பதிவு 

செய்திட விரும்புகிறேன்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் 

அம்மையார் அவர்கள், வெள்ளம் பாதித்த

பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறேன்  

என்ற பெயரில் வழக்கம்போல குளிரூட்டப்பட்ட 

மகிழுந்தில்உட்கார்ந்திருந்தபடியேஏதோதேர்தல் 
பரப்புரைக்கு வந்த மாதிரியே தனது கடனைக் 

கழித்துவிட்டுச் சென்றுள்ளார். இதுக்கு இந்த 

பொம்பளை வராமலேகூட இருந்திருக்கலாம் 

என அந்தப்பகுதி மக்கள் உள்ளத்து எரிச்சலோடு 

பேசிக்கொண்டிருந்ததை என்னால் கேட்க 

முடிந்தது.


ஏதோ பேருக்கு வந்தோம் போனோம்னு 

இருந்தாக்கூடபரவாயில்லைங்க. எதையாவது 

பேசணும் என்பதற்காக இப்படி பேசினா அது 

எப்படிங்க ? நீங்களே சொல்லுங்க :-

முதல்வர் :-  மக்களே !!. மூன்று மாதங்களில் 

பெய்திருக்க வேண்டிய மழை, மூன்றே 

நாட்களில் பெய்து கொட்டித்தீர்த்ததால் இந்த 

சீற்றம். என்னதான் முன்னெச்சரிக்கை 

நடவடிக்கை எடுத்திருந்தாலும் இதைத்தடுக்க 

இயலாது.


அப்படீன்னு தனது திருவாய் மலர்ந்து 

அருளியுள்ளார்.இப்ப மக்கள் என்ன 

கேக்கிறாங்கன்னு சொன்னா, நீங்க 

மட்டும் 5,௦௦௦ ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 

அடிக்கவேண்டிய கொள்ளையை ஐந்தே 

ஆண்டுகளில் கொள்ளை அடித்து சேமித்து 

வைக்கலாம். 

இயற்கை அதேபாணியை கடைப்பிடித்தால் 

அது தப்பா ? இல்ல..நான்..கேக்குறேன்.

உங்களுக்கு ஒரு நியதி !! இயற்கைக்கு ஒரு 

நியதியா !!

உங்க ஆட்டம் இன்னும் 6 மாசம்தான். அதுக்கு 

அப்புறம் நினைச்சுப் பாருங்க. உப்பு தின்னவன் 

தண்ணி குடிச்சே தீரனும். தப்பு செஞ்சவன் 

( செஞ்சவள்) தண்டனை அனுபவிச்சே தீரனும். 

இதுக்கு அம்மையார் அவர்களே !!

நீங்க ஒன்னும் விதிவிலக்கு அல்ல !!


நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக