ஆண் ஆதிக்க சமூகமா ? அப்படீன்னா என்ன ? அது இப்போ இருக்கா என்ன ?
பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
இன்றைக்கு ஏறத்தாள 60 முதல் 70 ஆண்டுகட்கு
முன்புவரை இங்கே ஆண் ஆதிக்க சமுதாயம்
கொடிகட்டித்தான் பறந்து கொண்டு இருந்தது.
ஆண்கள் முன் பெண்கள் உட்காரக் கூடாது
சொன்னால் ஒழிய. வந்து வந்து நிற்கக் கூடாது
கூப்பிட்டால் ஒழிய. காலையில் சுமார் நான்கு
மணிக்கே எழுந்து இரவுவரையில் சேர்ந்த பத்து
பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்தபின்பு
சேர்ந்துள்ள அழுக்குத் துணிகளை துவைத்து
காயப்போட்டுவிட்டு, வீட்டைகூட்டி பெருக்கி
சுத்தம் செய்துவிட்டு, கினற்றினில் நீர் இறைத்து
குளித்துவிட்டு, கணவனுக்கு விறகு அடுப்பினில்
சுடுதண்ணீர் போட்டு விட்டு, பூஜை அறைக்கு
சென்று சுவாமியை வணங்கி விட்டு, காலை
காப்பி சேர்த்து மணாளனுக்கு கொண்டுபோய்
அவனது அறையினில்உறங்கிக்கொண்டிருக்கும்
கணவனை எழுப்பி, காப்பி கொடுத்துவிட்டு, ஏங்க,காலையிலே பலகாரம் என்ன செய்யட்டும் என்று எஜமானிடம் உத்தரவு கேட்டு அதன்படி தயார் செய்து, பாத்=ரூமில் அவனுக்கு வெந்நீர் விளாவிசரியான சூட்டில் தந்து அவனைக் குளிப்பாட்டி,பிறகு அவனுக்கு காலையில் அவன் சொன்னபடி தயார் செய்த பலகாரத்தை அவனுக்குப் பரிமாறி அவன் அலுவலகம் சென்றபின்பு அவன் சாப்பிட்ட தட்டினில், தானும் உண்ட பின்பு, மதியம் சமையல்கணவன் சொன்னபடி தயாரித்து, அவன் மதியம் வந்தபின்பு வாழை இலையில் அவனுக்கு சுடச்சுட
பரிமாறி, அதில் ஏகப்பட்ட குற்றங்குறைகளை
அவன் சொல்ல,அதனைமிகவும்பொறுமையுடன்
கேட்டு, அவன் சென்றவுடன், அவன் உண்ட அந்த
எச்சில் இலையிலே தானும் உண்டு, அதன்பிறகு,
காய்ந்திருந்த துணிமணிகளை மடித்து வைத்து
பின் வீட்டைக் கூட்டி பெருக்கி குப்பை அள்ளி,
மீண்டும் மாலையில் சுவாமி அறைக்குச் சென்று
விளக்கேற்றி இறைவனை வணங்கி விட்டு, இரவு உணவு ( இதுவும் ஏற்கனவே கணவன் சொல்லியது)தயாரித்து, அவன் வந்தவுடன் பரிமாறி,( இதுலே என்ன கொடுமைன்னு கேட்டா, அப்ப எல்லாம் இப்ப இருக்குற மின்விசிறி வசதி கூட கிடையாது)அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை, காலை,மதியம்,இரவு மூன்று வேளையும் அவனருகில் நின்றுகொண்டு பனை ஓலை அல்லது தென்னை ஓலை விசிறிகொண்டு வீசிக்கொண்டே இருக்கணும் ( இந்த மானங்கெட்ட பொழைப்புக்கு நாண்டுகிட்டு சாவலாம் என இந்தக்கால இளம் பெண்கள் விடும் முனகல் கேட்கிறதுஎனக்கு) அதன்பிறகு
அதே கணவன் சாப்பிட்ட தட்டில் தானும் உண்டு
பிறகு அவனுக்கு பசும் பால்நன்குவற்றக்காய்ச்சி
வாழைப்பழம்பின்தாம்பூலமும்கொண்டுபோய்
கொடுத்து அவனுக்கு கொடுத்து, தாம்பூலம் அவனோடு சேர்ந்து தாமும் தரித்து பின் இல்லறத்தில் நல்லறம் கண்டு அவன் அசதி நீங்கி உறங்கிடவேண்டி, அவனுக்கு
கால்கள் இரண்டையும் தனது கைகளால் நன்றாக இதமாக,பதமாக, அமுக்கி பிடித்து விட்டு, அவன் நன்றாக கண் அயர்ந்து தூங்கியவுடன்தான் மனைவியானவள்
தூங்கிடமுடியும்.
இதுதான்யா, இப்படித்தான்யா எங்க அம்மா, எங்க அப்பாகூட குடித்தனம் நடத்தியிருக்காங்க. சரி...இந்த மாதிரி ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய சமுதாயம் என்பது எதுவரை இங்கே அரசாள முடிந்தது என்று கேட்டால்:-
அதற்கான விடை இதோ இதுதான் :-
என்றைக்கு இங்கே தந்தை பெரியாரும்,பேரறிஞர் அண்ணாவும்,
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் பெண்கள் சுயமரியாதையோடு வாழ்ந்தே தீர வேண்டும் என நாடு,நகரம் எங்கும் மேடைகளில் முழங்கினார்களே அதுமுதல் பெண்கள், சுயமாக வேலைக்குச் சென்று பொருள் ஈட்டிட ஆரம்பித்தார்களோ அத்தோடு ஆண் ஆதிக்க
சமுதாயம் என்பது இங்கே அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டது. அதிலும் இன்னும் சற்று ஒருபடி முன்னேறி, என்று ஆணுக்குப்பெண் இணையாகவோ அல்லது ஆணைவிட மிக
அதிகமாகவோ சம்பாதிக்க ஆரம்பித்தாளோ
அன்றுமுதல் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
ஆம். அன்பர்களே.இன்று வீட்டிற்கு வீடு நிலைமை தலைகீழ்தான்.கணவன்தான் மனைவி எழுவதர்குமுன் எழுந்து பால் காய்ச்சி, காபி சேர்த்து அவளை எழுப்பி அன்போடு
அவளுக்குத் தந்து, டார்லிங். என்ன டிபன் இன்று நான் செய்து உனக்கு ஊட்ட என்று கேட்கும் அளவிற்கு சென்றுவிட்டது என்று சொன்னால், இதுதான் நான் தலைமுறை இடைவெளி என்று சொல்லுகிறேன்.
அந்தக்காலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
அதுதான் :-
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பது.
அது இன்று நடந்துகொண்டு இருக்கிறது.
இனி என்றென்றும் இதுதான், இதுமட்டும்தான்
நடைபெறும் என்று சொல்லி கட்டுரையை நான்
இந்த அளவினில் நிறைவு செய்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
சூப்பர் ஜி சூப்பர் உண்மை உண்மை உண்மையே....
பதிலளிநீக்கு