திங்கள், 30 நவம்பர், 2015

இல்ல.....தெரியாமத்தான் கேக்கிறேன்.....கொஞ்சமாவது...சூடு..சொரணை..மானம்..வெட்கம்.............







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!




அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

வணக்கம். உங்கள் அனைவருக்கும். நேற்று 
உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீரிப்பின் வாயிலாக நமது தமிழ்நாடு அரசாங்கத்திற்கு 
இரண்டு வேறு வேறு வழக்குகளில் சரியான 
சாட்டையடி கொடுத்துள்ளது.

1)  நடிகர் திரு.விஜயகாந்த் ( இவர் தமிழ்நாட்டு 
மக்களுக்கு செஞ்ச உதவி இருக்கே, அதை என் 
வாயாலே சொல்ல முடியாது. என்னான்னு 
கேட்டா, இன்னைக்கு அ.இ.அ.தி.மு.க. (அநியாய 
இங்கிதமும் அறிவுமில்லாத திருட்டு முட்டாள்கள்  கழகம்) ஆட்சி இந்த நாட்டில் அமைந்திட முக்கிய துருப்பு சீட்டாக, இவரது வாக்கு வங்கியினால் மட்டுமே அனேக இடங்களில் வெற்றிக்கனியை தாரை வார்த்து தந்த வகையில் செயல்பட்டதால்தான் அம்மா 
ஜெயலலிதா பதவியில் அமர முடிந்தது) மீதான 
அவதூறு வழக்கின் விசாரணையின் முடிவில் 
நீதிஅரசர்கள், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 
ஏன்,எதற்காக, இந்த அளவுக்கு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது ? 

என்று கண்டனம் தெரிவித்ததுடன், எதிர்கட்சிகளின் விமர்சனம் எல்லாமே அவதூறு ஆகிவிடாது,என்றும் அதனை  எதிர்கொண்டு செயல்படவேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை என்று சொல்லி வழக்கை அடுத்த மாதம் ஒத்தி வைத்துள்ளது.

2)  தெருப்பாடகர் திரு. கோவன் அவர்களை 
மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை 
நடத்திட உத்தரவிட வேண்டும் எனவும், உயர்நீதி 
மன்ற தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை விதிக்க 
வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை அறிமுக நிலையிலே, இவ்வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை, என்று கூறி உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


மேலே சொன்ன இந்த இரண்டு காரணத்திற்கும் 
மூல வித்தகர்களான நமது தமிழக அரசும் 
அதன் முதலமைச்சரும், இப்படி ஒரு தீர்ப்பு 
வந்ததற்கு, உப்பு போட்டு உணவருந்துவது 
என்பது உண்மையானால், உடம்பிலே கொஞ்சம் 
சூடு,சொரணை,மானம்.வெட்கம் ( மேலே சொன்ன இந்த நான்கும் பொதுவாக பணம் பண்ணுவது ஒன்றே தனது வாழ்நாள் இலட்சியம் என்று இங்கு வாழ்பவர்கள் எவருக்கும் கிடையவே கிடையாது என்பது ஒருபுறம் இருக்க) இருந்தால் உடனடியாக அரியணையை விட்டு விலகி இருக்க வேண்டாமா ?


நான், உன்னை விட்டு விலகுவதும் இல்லை !!
உன்னை கைவிடுவதும் இல்லை !!

( இயேசு கிறிஸ்து சொன்னது பாதிக்கப்பட்ட, தன்னை வந்து தஞ்சம் அடைந்த மக்களுக்கு சொன்ன ஆறுதல் வாசகம்) 

நம்மை இந்த சனியன் பிடிச்ச அரசாங்கம் விட்டு
விலகப்போவதும் இல்லை.
நம்மை அழித்து, இந்த தமிழ்நாட்டினை கபளீகரம் செய்து, இதுவரை இருந்த வளங்கள் அனைத்தையும் கொள்ளை அடித்தது போதாது என்று மிச்சம் மீதி இருக்கின்ற அனைத்து வளத்தையும், நலத்தையும் தனதுசொந்தஅந்தரங்க தோழியின் குடும்பத்திற்குத்தாரை வார்த்து தராமல் இந்த அம்மையார் நம்மை கைவிடுவதும் இல்லை !!

இன்னும் எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !!


என்ற பாடல் வரிகள்தான் என் நினைவின்பால் 
எழுகின்றது.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக