பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம். இப்பவும் நமது
தமிழக அரசு, இப்போது பார்க்கின்ற வேலைகள்
என்னவென்றால், மத்திய அரசிடம் இருந்து
வெள்ள நிவாரண நிதியாக எவ்வளவு ஆயிரம்
கோடிகள்வாங்கலாம், அதை எப்படி பங்கு
போடலாம், யார் யாருக்கு எவ்வளவு
கொடுத்தோம் என்று சொல்லி கணக்கு எழுதி
அதை எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல்
நடைபெறும்போது அந்தப் பணத்தை இந்த
பாழும் ஏழை மக்கள் கண்ணில் காட்டி,
அவர்களது விலைமதிப்பில்லாத ஓட்டுக்களைப்
பெற்று இங்கே மீண்டும் அரியணையில்
அமர்ந்து இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் ஆட்சி
செய்து, தமிழ்நாட்டையே சுத்தமாக கொள்ளை
அடித்து, தோழியின் குடும்பத்தை உலகின்
முதல்நிலை கோடி கோடீஸ்வரியாக ஆக்கி
கின்னஸ் சாதனை பெற வேண்டும் என்ற
ஆசையை மட்டும் மனதினில் தேக்கி வாழ்வது
நன்றாகவே தெரிகிறது.
நான் கேட்கிறேன், தமிழ்நாட்டு மக்கள் என்ன
சர்வ முட்டாள்களா, இன்னும் உங்களுக்கு
வாக்களித்து ஏமாந்துபோக ?
என்ன தைரியத்தில், நீங்க இருக்கீங்கன்னு
எனக்கு யோசிச்சு யோசிச்சு பார்த்தேன்.
ஒண்ணுமே புரியலை.
வெள்ளம் பாதித்தபகுதிகளுக்கு,இதுவரையிலும்
நேரில் செல்லாமல் இருந்துகிட்டு, ஜனங்க
உங்களுக்கு எப்படிங்க இனிமேலும்
ஒட்டுப்போடுவாங்கன்னு நீங்க
எதிர்பார்க்கிறீங்க ? இல்ல தெரியாமத்தான்
கேட்கிறேன். ஒன்னு மட்டும் நிச்சயம், நீங்க
இங்கே வரும் தேர்தலில் எத்தனை இடத்துலே
டெபாசிட் தொகை வாங்கப்போறீங்களோ அது
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இப்ப ஆட்சி, அதிகாரம் உங்க கையிலே
இருக்குற வரைதான் நீங்க மஞ்ச குளிக்கலாம்.
அப்புறம் ?
செல்லாக்காசுதான் நீங்க.
பாப்போம். எது நடக்கப்போகுதுன்னு
நன்றி.வணக்கம்.
அன்புடன். திருமலை.இரா. பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக