திங்கள், 11 ஜனவரி, 2016

உச்சநீதி மன்றத்தில் தடை செய்யப்படும் என்று தெரிந்தே மத்திய அரசு, அரசாணை பிறப்பித்தது நியாயம்தானா நீ சொல்லு ?




  1. பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

  2. அஸ்ஸலாமு அலேக்கும் !!

  3. அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!


  1. உலகம் முழுவதும் வாழ்ந்துவருகின்ற என் 
  2. அன்புத் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும்
  3. இனிமை நிறைந்த காலை வணக்கங்கள்.

  4. தமிழர்களின் பாரம்பரிய, மற்றும் கலாச்சாரம் 
  5. மட்டுமே முற்றிலும் சார்ந்துள்ள ஒரு வீர 
  6. விளையாட்டு என்று சொல்லப்படுகின்ற 
  7. ( ஏறு தழுவுதல் ) ஜல்லிக்கட்டு போட்டியை 
  8. நடத்திட வகை செய்திடும் வண்ணம் மத்திய 
  9. அரசாங்கம் கடந்த 8ம் தேதி வெளியிட்ட ஒரு 
  10. அரசாணையின் ( Gazette Notification ) மூலமாக 
  11. காளை என்ற இனத்தை காட்டு விலங்குகள் 
  12. என்ற பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவு ஒன்றுபிறப்பித்தார் மத்திய சுற்றுச் சூழல் மற்றும்வனத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவ்டேகர்அவர்கள், என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

  1. ஆனால், இதில் யாவரும் அறிந்திடாத விஷயம்ஒன்று உள்ளது. இது தலைநகர் புதுடெல்லியில்உள்ள நமது நாட்டின் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும்
  2. தெரிந்தேதான் இந்த அவசரகால 
  3. அரசாணையை பிறப்பித்து உள்ளனர், இது சந்தேகத்திற்குஇடமின்றி உச்ச நீதி மன்றத்தில், பிராணிகள் நல வாரியம், மற்றும் இது சம்பந்தப்பட்ட பொது நலஅமைப்புக்கள் உச்ச நீதி மன்றத்தில் தடை ஆணை பெற்று விடுவார்கள் என்பதே நான் வைத்திடும் 
  4. முதல் குற்றச்சாட்டு.


  1. உண்மையிலேயே மத்திய அரசாங்கத்திற்கு நமது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டிற்கு இங்கே சட்டத்தின் வாயிலாக அனுமதிபெற்று அது நடைபெற
  2. வேண்டும் என்கின்ற ஆசை,அவா,விருப்பம், எண்ணம்உண்மையில்இருந்திருக்குமேயானால், அவர்கள் என்ன செய்து  இருக்க வேண்டும் ? பாராளுமன்றத்தில் ஒரு அவசர 
  3. சட்ட திருத்தம் கொண்டு வந்து அதனை நிறைவேற்றுதல் மூலமாக, நமது வீர விளையாட்டிற்கு தடைநீங்கி நடைபெற்றிட வழிவகை செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்திடாமல் மைய நடுவண் அரசு பதவி ஏற்று இந்த பதினெட்டு மாத காலங்களில் ஏன் இதனை செய்திடவில்லை ? 

  1. கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே சர்வாதிகார, பழிவாங்கும் அரசியலை மட்டுமே நடத்தி அதன் வாயிலாக, தமிழகத்திற்கு நலன்தரும்பலன்தரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை 
  2. முடக்கி வைப்பது ஒன்றே தமது இலட்சியம் என்று எண்ணி ஆட்சிக்கட்டிலில் (திரு.விஜயகாந்த் அவர்கள் போட்ட பிச்சை வாக்குகளால் மட்டுமே ) அமர்ந்த 
  3. நவீன ஹிட்லர்,முசோலினி வரிசையில் வலம்வந்துள்ள ஜெயலலிதாவும் இதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திடவே இல்லை. நான் கேட்கிறேன் மத்திய அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் 
  4. ( Attorney general) திரு முகில் ரோஸ்தகி அவர்கள் தனது கருத்து இந்த அரசாணை பிறப்பித்தல் விஷயத்தில்,என்ன சொல்லி இருக்கிறார் என்று கேட்டால், இப்படி 
  5.  அரசாணை பிறப்பித்தால் அது உச்ச நீதி மன்றத்தை அவமரியாதை செய்த செயலுக்கு ஒப்பாகும் மேலும் இந்த ஆணை செல்லாதது என்று சொல்லி பிராணிகள் நல வாரியம் தடை ஆணை பெற்று விடுவார்கள் என்று 
  6. எவ்வளவோ மன்றாடி கேட்டுக்கொண்டும் அதன் பிறகு மைய அரசு இந்த அவசர அரசாணை பிறப்பித்து உள்ளது என்று 
  7. சொன்னால், என்ன அர்த்தம் ?

  1. 1) உலகிலேயே இளிச்சவாய் இனம் தமிழ் இனம். ஆகவே அவர்களை ஏமாற்றிட இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி வெளியிட்டார்கள் என்று சொல்வதா ?

  2. அல்லது 
  1. 2)  நிச்சயம் இந்த அரசாணை அதனை எதிர்த்து பிராணிகள் நலவாரியம் தடை ஆணை கேட்டு உச்ச நீதி மன்றம் செல்வார்கள் அப்போது இது தடை செய்திடப்படட்டும் என்று எண்ணித்தானே மைய அரசு இதனை கொண்டு வந்திருக்க வேண்டும் ?

  2. ஆக மொத்தத்தில் நான் அடிப்பதுபோல அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு என்று சொல்வது போல நான் விலங்குகள் பட்டியலில் இருந்து காளை இனத்தை 
  3. நீக்குவது போல் நீக்குகிறேன். அதன்பின்பு பிராணிகள் நலவாரியத்தால் தடை ஆணை பெற்று தடுக்கட்டும் என்று எண்ணித்தானே இதனை செய்தார்கள் ?
  1. எது எப்படியோ மாட்டுப் பொங்கல் அன்று இந்த வீர விளையாட்டு இங்கே தமிழகத்தில் நடைபெறாது போனால் அதற்கு முழுக்க முழுக்க முதல் கரணம் ஜெயலலிதாவும் 
  2. திரு.நரேந்திர மோடி அவர்களும்தான் என்ற எண்ணத்தைதமிழர்களின் நெஞ்சத்தில் இருந்து இந்த இருவர்களாலும் 
  3. என்றென்றும் நீக்கிடவே முடியாது. அதன்பலன் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் இவர்கள் இருவரும் கட்டாயம் தெரிந்துகொள்வார்கள்.
  1. இதுதான் இந்தக் கட்டுரைக்கு நான் தந்துள்ள தலைப்புக்கு தருகின்ற அர்த்தம் பொதிந்த விளக்கம்.

  1. நன்றி !! வணக்கம் !!


  2. அன்புடன். திருமலை. இரா.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக