வெள்ளி, 29 ஜனவரி, 2016

கேப்பையில் நெய் வடிகின்றதென்றால் ? கேட்பவனுக்கு மதி எங்கே செல்கிறது ?






பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!

அன்புத் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் 
என் இனிமை நிறைந்த காலை வணக்கங்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போது 
சற்று சூடு பிடிக்க ஆரம்பிக்கின்ற நேரம். இப்போதே ஒவ்வொரு கட்சியினரும், அதிலும் குறிப்பாகச்சொல்லிட வேண்டுமென்றால் அருமை நண்பர் பாட்டளிமக்கள் கட்சியின் நிறுவனர்/தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் நாளொரு சேதியும் பொழுதொரு அறிவிப்பும் வெளியிட்ட வண்ணமாகவே வலம்வருவது கண்டு நம்மால் எள்ளி நகையாடாமல் இருக்க முடியவில்லை.

சில தினங்களுக்கு முன்பு சொன்னார்:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ( வரவே போவது 
என்பது கிடையாது-அதுவேற விஷயம்) மக்கள் 
அனைவருக்கும் இலவச பேருந்துபயணம் என 
திருவாய் மலர்ந்து அருளினார்.ஏற்கனவே இந்த ஆட்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் கிட்டத்தட்ட அனைத்துமே பழைய காயலான் கடைக்கு மட்டுமே கொண்டு சென்றிடும் நிலைமை ஒருபக்கம் மறுபக்கம் பல்லாயிரம் கோடிகள் நஷ்டத்தில் அது இயங்கி வருகிறது. இந்த நிலையில் இலவசப்பயணம் எப்படி சாத்தியம் என்பதனை மருத்துவர்தான் விளக்கிட வேண்டும்.

நேற்றைய தினம் பார்த்தால்,தமிழ்நாட்டில் உள்ள மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் உயர்கல்வி படித்துமுடித்திடும்வரை அவரவர்களது கல்விச்செலவு முழுவதும்
அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்று உரைத்து 
அதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் அனைரையும் 
கடைந்தெடுத்த சர்வ முட்டாள்களாக்கிட அவர் 
எண்ணுகிறாரோ என்ற ஐயப்பாடு இங்கே உள்ள 
அனைவருக்கும் வந்தாகிவிட்டது.

ஏற்கனவே அம்மையார் ஆண்ட இந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் இதற்குமுன்பு கலைஞர் அவர்கள் முதல்வர் பதவியிலிருந்து விலகும்போது அவர் வைத்துவிட்டுச் சென்ற கடன் தொகை ஏறத்தாள 95 ஆயிரம் கோடிகள் ஆகும். இந்த அம்மையார் பதவி ஏற்கும்போது என்ன சொன்னார்:-

நாங்கள் திறமையாக ?ஆட்சி புரிந்து !!அரசாங்க 
வருவாயைபெருக்கி (தங்களது & தோழியரது
குடும்ப வருமானங்கள்,சொத்து,சுகங்கள்தான் இங்கே பல்கிப் பெருகி உள்ளது) அதன்மூலமாக கலைஞர் அவர்கள் விட்டுச்சென்ற கடனை நான் அடைப்பேன்என்ற வீரவசனம்பேசியவர்அட்டைக்கத்தி வீரர் மறைந்த புரட்டுநடிகர் MGRன் வாரிசான மாவீரிஜெயலலிதா என்பது உலகறிந்திட்ட உண்மையான நடந்த விஷயம். ஆனால் உண்மையில் இங்கே என்ன நடந்தது ?

அந்தக்கடனே பல்வேறு வகையில் வளர்ந்து பெருகி இன்று ஏறத்தாள அது இரண்டரை கோடிகள் வரை வளர்ந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் அரசாங்க 
ஊழியர்களுக்கு சம்பளம் போடவே கஜானாவில் 
பணமின்றி அதற்கும் கடன் வாங்கி தருகின்ற நிலைதான்  தாழ்ந்த தமிழகத்தில் உள்ளது. தனி மனிதன்தான் கடனுக்கு வட்டி கட்டிட இயலாமல், அந்த வட்டி கட்ட கடன் வாங்கிக் கட்டும் நிலைமை உள்ளது. ஆனால் இன்று அரசாங்கமும் அந்தவேலையைத்தான் செய்து 
வருகின்றது என்பது வேதனை அளித்திடும் விஷயம்.

ஆக, நிலைமை இப்படி இருக்கும்போது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்/தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிவிக்கின்ற இலவச திட்டங்களை எல்லாம் செவியால் கேட்கின்றபோது நினைவுக்குவந்த தமிழ் 
பழமொழிதான் கட்டுரைக்கு தலைப்பாகத் இங்கே தரப்பட்டு உள்ளது அன்பர்களே !! 

அந்தப் பழமொழி இதுதான் :-

கேப்பையில் நெய் வடிகின்றதென்றால் ?
கேட்பவனுக்கு மதி எங்கே செல்கிறது ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை. இரா.பாலு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக