கோவை: பி.ஜே.பி. பொதுக்கூட்டத்தில் மோடி மாநில அரசியல் பற்றி எதுவுமே பேசாமல் மவுனம் காத்தது !! நியாயம்தானா நீ சொல்லு ?
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம்.
ஒரு வழியாக புலி வருது, புலி வருது
என்று நம்மில் அனைவரையும் நம்ப
வைத்து, எதிர்பார்த்துக்காக்க வைத்து
இறுதியில் புஸ்வானம் ஆகிப்போன
கதையாக நேற்றையதினம் கோவையில்
பாரதப்பிரதமர் திரு மோடி அவர்கள்
கலந்துகொண்டு தமிழக அரசியல்
களத்தில் ஒரு திருப்புமுனையை இங்கே
ஏற்படுத்துவார் என்ற நம் அனைவரின்
எண்ணத்திலும் மண்ணை அள்ளிப்போடும்
விதமாகவே அவரது தேர்தல் பரப்புரை
அமைந்திருந்தது என்று சொன்னால் அது
மிகையான ஒன்று அல்ல.
முதலில் திரு மோடி அவர்கள் ஒன்றினைப்
புரிந்துகொண்டு அங்கே கோவையில் அவர்
பேசியிருக்க வேண்டும்.இங்கே தமிழகத்தில்
நடைபெற இருக்கும் தேர்தல் ஒன்றும் டெல்லி
பாராளுமன்றத்திற்கான தேர்தல் கூட்டம் அல்ல
அதற்காக நடைபெறுகின்ற பரப்புரையை
தாம் ஆற்றுவது என்பது இல்லை. இதனை அவர் புரிந்துகொண்டு பேசியிருக்க வேண்டும்.ஆனால் அதற்கு மாறாக இங்கே நடைபெற இருப்பது மாநில சட்டமன்றத்திற்கான ஒரு தேர்தல். அப்படி என்றால் அவர் என்ன இங்கே
பேசி இருந்திருக்க வேண்டும். மாநில அரசியல்
செயல் பாட்டில், தமது கட்சி இன்னின்ன நிலை
எதிர்காலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால்
( இவர்கள் ஒருக்காலும் தனித்தோ அல்லது
திமுக தவிர்த்து ஏனைய கட்சிகளோடு கூட்டு
சேர்ந்தோ வரப்போவது என்பது கிடையவே
கிடையாது-அது வேற விஷயம்) மக்களுக்கு
இப்படி,இப்படி நல்ல பல திட்டங்களைச் செயல்
ஆற்றுவோம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், இன்னின்ன பல
வகை ஊழல் குற்றச்சாட்டுக்கள், அதிகார
துஷ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன அதனை
கண்டிக்கும் விதமாக அல்லவா அவரது பேச்சு
அமைந்திருக்க வேண்டும் ? அப்படி இல்லையே.
என்ன காரணம் ? கேட்கிறார்கள் பொதுமக்கள்.
பதில் சொல்லக் கடமைப்பட்டவர் திரு மோடி
அவர்கள். பாவம்அவரதுமாநிலக்கட்சிக்காரர்கள்.
வாய் கிழிய, தொண்டை நரம்பு புடைக்க, மேல்
மூச்சு கீழ் மூச்சு வாங்க, கத்தோ கத்துன்னு
கத்தித் தீர்த்த மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை சவுந்திர ராஜன் அவர்கள் பேசியிருந்ததற்காகவாவது திரு மோடி அவர்கள் லேசாகப் பேசியிருக்க வேண்டாம் ?
என்னய்யா நீங்கள் அரசியல் நடத்துகிறீர்கள் ? யாரைப் பார்த்து பயப்படுகிறீர்கள் ? இல்லை வேறு ஏதாவது சமாச்சாரமா ?
விளக்கிப் பேசவேண்டிய கடமை திரு
மோடி அவர்களுக்கு உள்ளது.
அதே போல அவர் ஏன்எதற்காக, வாய் மூடி மவுனியாக நடந்துகொண்டார் மாநில அரசியல் விசயத்தில் என்று கேள்வி கேட்க தமிழக மக்களுக்கும் உரிமை இருக்கிறது ?
திருவாய் மலர்ந்து அருளுவாரா ? திரு. மோடி அவர்கள்.
அதனைக் கேட்க தமிழகமும் தமிழ்நாட்டு மக்களும்இங்கே காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பதில் சொல்லுங்கள் திரு. மோடி அவர்களே !!நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை. இரா. பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக