செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புதிய தலைவராக திரு. HL.தத்து நியமனம்.






எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அனைவருக்கும் வணக்கம்.

நமது தேசத்தின் உயர்ந்த பதவிகளுள் ஒன்றுதான் இந்த 

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவர் 
பதவி என்பது. 

இதற்கு நேற்று பிரதமர் திரு.மோடி மற்றும் உள்துறை அமைச்சர், மற்றும் திரு குலாம்நபி ஆசாத் ஆகியோர் கூடிப்பேசி கலந்து தேர்ந்து எடுத்த நபர் யார் என்று கேட்டால், அவர்தான் உச்சநீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு H.L. தத்து அவர்கள்.

சரி. இந்த தத்து அவர்கள் யார் ? என்று கேட்டால் இவர்தான் அம்மையார் அவர்கள்சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் மைக்கேல் D.குன்ஹா அவர்களால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு ஜாமீன் கேட்டு கர்நாடகா உயர்நீதி மன்றத்தை அணுகி அங்கே ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் நேராக உச்சநீதி மன்றத்தை அணுகி அப்போது அங்கே தலைமைநீதிபதியாக இருந்த திரு.HL.தத்து அவர்களை அணுகியவுடன், எவ்வித மறுப்பும் இல்லாமல், உடனடியாக ஜாமீன் வழங்கிய நல்லவர் வல்லவர் உத்தமர்.

அதுமட்டுமல்ல. அம்மையார் அவர்கள் தனது மேல்முறையீட்டு மனுவை கர்நாடகா உயர்நீதி மன்றத்தில்  சமர்ப்பித்தபோது, அப்போதும் இவர் பெங்களூரு வந்து, நீதியரசர் TK.குமாரசாமி அவர்களை நேரில் நீதிமன்றத்திலேயே வந்து சந்தித்து, ஆலோசனைகளை வழங்கி, அதன் அடிப்படையில் மட்டுமே  அந்த மேல்முறையீட்டு வழக்கில் விடுதலையும் செய்திட ஆவன அனைத்தும் அம்மையார் அவர்களுக்கு உதவியவரும் இவரே ஆவார்.

அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருக்கு, தன்னைக் காப்பாற்றிய அந்த உத்தமருக்கு, அம்மையார் அவர்களின் மறைமுக சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே, கிடைத்ததுதான் இந்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவர் பதவி என்று பல அரசியல் ஆர்வலர்கள் பேசிக்கொள்வதை நான் காத்து வாக்கில் கேள்விப்பட்டதை உங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரவே இதனை இங்கே பதிவு செய்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக